2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

தந்தைக்கும் மகனுக்கும் தண்டம்

Super User   / 2014 ஏப்ரல் 22 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

போக்குவரத்து விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிள் செலுத்திய 14 வயதுச் சிறுவனுக்கு 9,000 ரூபா அபராதம் விதித்து  சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகர இன்று(22) உத்தரவிட்டார்.

மேலும் சிறுவனுக்கு மோட்டார் சைக்கிள் செலுத்தக் கொடுத்த சிறுவனின் தந்தைக்கு 3,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி பெரியமாவடியைச் சேர்ந்த மேற்படி சிறுவன் நேற்று(21) தந்தையின் மோட்டார் சைக்கிளினை செலுத்தி எதிரே வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளான்.

இவ்விபத்து தொடர்பில சாவகச்சேரி பொலிஸார் சாவகச்சேரி நீதிமன்றில் குறித்த சிறுவன் மற்றும் அவனது தந்தைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தனர்.

குறித்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது நீதிபதி அபராதம் விதித்ததுடன் சிறுவனின் தந்தைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--