2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

யாழ்.சிறைச்சாலை பெண் கைதிகளுக்கான பனை வேலைப்பயிற்சி

Kanagaraj   / 2014 ஏப்ரல் 24 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் பெண்கள் பணியகமும், யாழ். மாவட்ட செயலக பெண்கள் சிறுவர் அபிவிருத்தி நிலையமும் இணைந்து பனை அபிவிருத்திச் சபையின் உதவியுடன் யாழ்.சிறைச்சாலையிலுள்ள பெண் கைதிகளுக்கான 5 நாள் பனை வேலைப் பயிற்சியினை இன்று (24) முதல் ஆரம்பித்தன.
 
சிறைச்சாலையில் உள்ள பெண் கைதிகள் சிறையில் இருக்கும் போது, திறன்களை வளர்த்துக் கொள்ளவும், பொருளாதார ரீதியில் மற்றவர்களை தங்கி நிற்காது தம்மை தாமே ஆளுமை செய்யக்கூடிய வகையிலும், இயற்கை வளங்களை பயன்படுத்தி சுயதொழிலை கற்றுக் கொள்ளும் நோக்கத்துடன், பனை வேலைப்பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த பெண் கைதிகள் தண்டனை முடிவுற்று விடுதலையான பின்னர் பொருளாதாரத்தில் மற்றவர்களை நம்பி இருப்பதினால், சட்டவிரோத செயல்களில் ஈடுபடாது தடுப்பதற்கான நோக்கத்துடன் இப்பயிற்சி வழங்கப்படுகின்றது.
 
5 நாள் பயிற்சி பட்டறை நிறைவுற்றதும் விரைவில் தண்டனை முடிந்து வீடு செல்லவுள்ள பெண் கைதிகளுக்கு சிறு தொகையிலான முதலீட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும், யாழ். மாவட்ட செயலக சிறுவர் பெண்கள் அபிவிருத்தி நிலைய உத்தியோகத்தர் தெரிவித்தார்.
 
இப்பயிற்சி பட்டறையில், யாழ். மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.சுதர்சன், பனை அபிவிருத்தி சபையின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X