2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

வீட்டிலிருந்தவர்களை தாக்கி உடமைகள் கொள்ளை

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 30 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், தாவடி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புதன்கிழமை (28) அதிகாலை நுழைந்த கொள்ளையர்கள் சிலர், வீட்டிலிருந்த கணவன், மனைவியைத் தாக்கி கட்டிவைத்துவிட்டு 3 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என  சுன்னாகம் பொலிஸார் கூறினர்.

கொள்ளையர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த நாகலிங்கம் பரமானந்தம் (வயது 66) என்பவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டிலிருந்த 3 பவுண் நகைகள், 3 அலைபேசிகள் மற்றும் 2 கணினிகள் ஆகியவையே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, உடுவில், லவ்லேன் வீதியிலுள்ள வீடொன்றிலும் நேற்று புதன்கிழமை அதிகாலை 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளன. இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சுன்னாகம் பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .