2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் விவசாய அமைச்சர் சந்திப்பு

Menaka Mookandi   / 2015 ஜனவரி 30 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.இந்தியத் துணைத்தூதரகரத்தின் கொன்சலட் ஜெனரல் ஆறுமுகம் நடராஜன் மற்றும் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் இடையிலான சந்திப்பு வியாழக்கிழமை (29) வடமாகாண விவசாய அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தின் விவசாயம், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, நீர்ப்பாசனம் ஆகிய துறைகள் தொடர்பான திட்டங்களுக்குத் தாம் உதவத் தயாராக இருப்பதாக துணைத் தூதுவர் ஆ.நடராஜன், அமைச்சரிடம் உறுதியளித்தார்.

அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரன், வடமாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் சோ.சிவபாதம், வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரப் பணிப்பாளர் சி.வசீகரன், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆணையாளர் வ.மதுமதி, அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் த.சர்வானந்தா ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .