Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 பெப்ரவரி 11 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் இருந்து தினமும் காலை 8.00 மணிக்கு துணுக்காய் வரை செல்லும் அரச மற்றும் தனியார் பேருந்துகளில் போட்டித்தன்மையால் பயணிகள், அரச உத்தியோகத்தர்கள் தினமும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் ஆகிய பகுதிகளில் வெளி மாவட்டங்களில் இருந்து அதாவது யாழ்ப்பாணம் கிளிநொச்சி, ஆகிய பகுதிகளில் இருந்து செல்லும் அரச மற்றும் அரச சார்பற்ற திணைக்கள அதிகாரிகள் மாங்குளத்தில் இருந்து துணுக்காய் நோக்கி; 7.30 மணிக்கு செல்லும் பேருந்திலேயே பயணிக்க வேண்டும். அத்துடன் மாந்தை கிழக்கு துணுக்காய் பகுதிகளின் போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்பட்;ட அளவுகளிலேயே இடம்பெறுகின்றன.
இந்நிலையில் ஏ-9 வீதியூடாக யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா மற்றும் ஏனைய பகுதிகளுக்கு செல்லும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் போட்டிபோட்டு செல்வதனால் கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தி, இரணைமடுச்சந்தி மற்றும் ஏனைய இடங்களில் இருந்து செல்லும் அதிகாரிகளையும் பயணிகளையும் ஏற்றிச்செல்வதில்லை எனவும் அவ்வாறு தவறும் நாட்களில் மாங்குளத்தில் இருந்து முச்சக்கரவண்டி மூலமோ அல்லது வேறு ஏதாவது வாகனத்திலோ செல்லவேண்டியுள்ளதாகவும் இதனால் தாம் பல்வேறு அசௌகரிங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
30 minute ago
40 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
40 minute ago
48 minute ago
1 hours ago