Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 16 , மு.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
தனது வீட்டு நாயை கடித்த தெரு நாயை துரத்திச் சென்ற நபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (15) காலை உடுவில் தெற்கு சுன்னாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
லக்ஸ்மன் ஜோசப் (வயது 61) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வழமை போல தனது வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்த நபர், தனது செல்லப்பிராணியை வெளியில் இருந்து வீட்டு வளவுக்குள் வந்த தெரு நாய் ஒன்று கடித்ததைக் கண்டு அந் நாயை துரத்தி சென்றுள்ளார்.
துரத்தி சென்றவர் இடையில் களைப்படைந்து மயங்கியுள்ளார். அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது, ஏற்கெனவே அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மரண விசாரணைகளை யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சடலம் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
36 minute ago
06 Mar 2021
06 Mar 2021