Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
- குணசேகரன் சுரேன்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் நிகழ்ந்த கவனிக்கத்தக்க சில சம்பவங்கள் நடந்தேறின. அவற்றில் சில பின்வருமாறு,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை முன்னிலைப்படுத்தி வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக இளைஞர், யுவதிகள் மூலம் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தோல்வியடைந்தார்.
கிளிநொச்சியில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் முருகேசு சந்திரகுமாருக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிவஞானம் சிறிதரனே அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றார்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (18) மாலை இடம்பெற்ற விருப்பு வாக்குகள் எண்ணும் இரண்டாம் கட்ட நடவடிக்கையின் போது, ஊடகவியலாளர்கள், கட்சிகளின் கண்காணிப்பாளர்கள் எவரும் அருகில் அனுமதிக்கப்படாமல் இரண்டாம் கட்ட விருப்பு வாக்கு எண்ணும் பணி இடம்பெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த 5 ஆசனங்களில் 5ஆவது ஆசனம், கந்தையா அருந்தவபாலன் என்பவருக்கு கிடைத்துள்ளது என முன்னர் தகவல் பரவியிருந்த நிலையில், அடுத்த சில மணித்தியாலங்களில் இரண்டாவது தடவையாக விருப்பு வாக்கு எண்ணப்பட்டு ஈஸ்வரபாதம் சரவணபவன் அந்த ஆசனத்தைப் பெற்றார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, 1994, 2000, 2001, 2004, 2010, 2015ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற 6 பொதுத் தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்று 6ஆவது முறையாக நாடாளுமன்றம் செல்கின்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதிக போட்டித்தன்மையுள்ளதாக கருதப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எவ்வித ஆசனங்களையும் பெறாமல் வெறும் 15 ஆயிரத்து 22 வாக்குகளுடன் தோல்வியடைந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெறும் 6 வாக்குகளால் ஒரு ஆசனத்தை ஐக்கிய தேசியக் கட்சிக்கு தாரைவார்க்க நேர்ந்தது.
சர்வதேச விசாரணை வேண்டும் என்பது தொடர்பில் அதிகம் விரும்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவு செய்யப்படவில்லை.
விடுதலைப் புலிகளின் மீள்பிரவேச கட்சி என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் தேர்தல் பிரசாரம் செய்யப்பட்ட ஜனநாயகப் போராளிகள் கட்சி, வெறும் 1979 வாக்குகளை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து குருநாகல் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் சுயேட்சைக்குழு அங்கு 91 வாக்குகளை மாத்திரமே பெற்றது.
கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி 723 வாக்குகளையும், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட அக்கட்சி 1,515 வாக்குகளையும் பெற்று தோல்வியடைந்தது.
17 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago