2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

நீர் மின்சாரத்தின் தந்தை டீ.ஜே.விமலசுரேந்திராவின் பிறந்த தினத்தையொட்டி 99 புதிய மின் விநியோகத் திட்

Super User   / 2010 செப்டெம்பர் 16 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(தாஸ்)

நீர்மின் தொழில்நுட்பத்தை இலங்கையில் அறிமுகப்படுத்தியவரும் நீர் மின்சாரத்தின் தந்தை என அழைக்கப்படுபவருமான பொறியியலாளர் டீ.ஜே.விமலசுரேந்திராவின் 136 ஆவது பிறந்த தினமான இன்று 17 ஆம் திகதி இலங்கை முழுவதும் 99 புதிய மின் விநியோகத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இலங்கை மின்சார சபையின் பிரதிப் பொது முகாமையாளர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது பிறந்த தினத்தை இலங்கை மின்சார சபையின் சகல அலுவலகங்களிலும் கொண்டாடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் உள்ள சகல மின்சார சபை அலுவலகங்களிலும் இத்தினம் கொண்டாடப்படவுள்ளதோடு 18 மின்விநியோகத் திட்டங்களும் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.

யாழ். மாவட்டத்தில் மின்விநியோகத் திட்டங்களை பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இத்திட்டங்களின் கீழ் கோப்பாய் கைட்டிபுலம் வீதி மின்விநியோகத் திட்டம், மறவன்புலோ வடக்கு மின்விநியோகத் திட்டம், புங்குடுதீவு மின்விநியோகத் திட்டம் ஆகியன ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .