Editorial / 2019 செப்டெம்பர் 05 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழர்களுக்கான அரசியல் தீர்வென்பது, சர்வதேச சமூகத்திடமிருந்து இறக்குமதியாகும் வெறும் பண்டமல்லவெனத் தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, மாறாக, தமது பேரம் பேசும் அரசியல் பலத்தை வைத்து, தமக்குள் தாமே பேசித்தீர்த்திருக்க வேண்டிய உள்நாட்டு விவகாரமெனவும் கூறினார்.
நாடாளுமன்றத்தில், இன்று (05) ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், தாம் இங்கு ஏற்றுமதி அபிவிருத்தி குறித்து விவாதித்துக் கொண்டிருப்பதாகவும் ஆனாலும், இங்கு சிலர் இறக்குமதி அரசியல் தீர்வு குறித்தே காலம் பூராகவும் சிந்தித்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
நாய்க் கடித்தால் என்ன; பூச்சி, பூரான் கொட்டினால் என்ன, அருகில் உள்ள வைத்தியசாலையை நாடாமல், அதற்குக்கூட சர்வதேசத்தை நோக்கி அண்ணாந்துப் பார்த்து, தமிழ் மக்களை ஏமாற்றிக்கொண்டிருப்போரையே தான் இங்கு சுட்டிக்காட்டுவதாகவும், அவர் தெரிவித்தார்.
சர்வதேச சமூகம் தமிழ் மக்களுக்குத் தீர்வு தருவது உண்மையென்றால், முள்ளிவாய்க்கால் அவலங்களின் போது, சர்வதேச சமூகம் வந்து நின்று ஏன் தமது மக்களைக் காக்கவில்லயெனவும், அவர் கேள்வியெழுப்பினார்.
தமது பிரச்சினைகளைத் தமக்குள் தாமே பேசித்தீர்த்திருக்க வேண்டுமெனத் தெரிவித்த அவர், அதற்கு தமது அரசியல் பலத்தைச் சரிவரப் பயன்படுத்தியிருக்க வேண்டுமெனவும் கூறினார்.
17 minute ago
11 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
11 Jan 2026