2020 ஜூன் 06, சனிக்கிழமை

சுழற்சிமுறை உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது

Editorial   / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் ரவிசாந்

யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கான புதிய நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துக் கடந்த 11ஆம் திகதியன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முன்பாக, வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்பட்ட பல்கலைக்கழக ஊழியர்கள் ஆரம்பித்த சுழற்சிமுறை உண்ணாவிரதப் போராட்டம், இன்று (19) ஒன்பதாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் கல்விசாரா ஊழியர்களின் வெவ்வேறு பதவிநிலை வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு உயர்கல்வி அமைச்சிலிருந்து வந்த பெயர்ப் பட்டியலில் வேலைவாய்ப்புக்காகத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசுடன், உயர்கல்வி அமைச்சில் தங்களது பெயர்களைப் பதிவு செய்து, தங்களது பெயர்கள் வராது பாதிக்கப்பட்ட கல்விசாரா ஊழியர்களே குறித்த சுழற்சிமுறையிலான போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.  

இதேவேளை, கடும்  வெயில் மற்றும் மழைக்கு மத்தியிலும் தாம் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இதுவரை பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளோ அல்லது அரசியல்வாதிகளோ தம்மைக் கண்டு கொள்ளவில்லை எனவும், போராட்டக்காரர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X