Editorial / 2019 நவம்பர் 13 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரயில் கடவையில் வைத்து ரயிலில் மோதுண்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து ஏற்பட்ட களேபரத்தினால் யாழ் - காங்கேசன்துறை மார்க்கத்திலான ரயில் சேவைகள் ஸ்தம்பிதமடைத்துள்ளன.
இன்று (13) காலை, காங்கேசன்துறை - கொழும்பு சேவையில் ஈடுபட்ட்ட ரயில், யாழ்ப்பாணம் நீராவியடி, பிறவுண் வீதி முதலாம் ஒழுங்கையைக் கடந்த சமயத்தில், ரயில் கடவையை கடக்க முற்பட்ட நபருடன் மோதி விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த நபர், வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற போது சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்திருந்தார்.
சம்பவத்தையடுத்து ஆத்திரமடைந்த ஊரவர்கள், ரயில் கடவைக்குக் குறுக்காகத் தடைகளை ஏற்படுத்தி போராட்டத்திலீடுபட்டனர். இதனால் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த குளிரூட்டப்பட் நகர்சேர் கடுகதிப் ரயில் தொடரந்து பயணிக்க முடியாமல் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
இதே கடவையில் மூன்றுக்கும் மேற்றபட்ட தடவைகள் பொதுமக்கள் தாக்கப்பட்டதோடு, பல தடவைகள் கால்நடைகள் தாக்கப்பட்டுமுள்ளன.
சம்பவ இடத்துக்கு ரயில் திணைக்கள காவல் அதிகாரிகள் வந்து பொது மக்களுடன் பேச்சில் ஈடுபட்டனர். எனினும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பெருமளவு பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து, விசாரணைகளை மேற்கொண்டு, பொது மக்களை சமரசம் செய்து வைத்ததனர்.
பொலிஸாரின் தலையீட்டை அடுத்து இரண்டரை மணி நேர இழுபறி முடிவுக்கு வந்தது.
-எம்.றொசாந்த்
4 hours ago
8 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
18 Mar 2026