Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 12 , மு.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
கடந்தகாலத்தில் இடம்பெற்ற யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் காணாமல் போனவர்கள் தொடர்பில் இதுவரையில் பதிவுகளை மேற்கொள்ளாமல் இருப்பவர்கள் தங்களது உதவி அரசாங்க அதிபர் பணிமனையிலோ அல்லது பிரதேச செயலகத்திலோ உடனடியாக பதிவினை மேற்கொள்ளுமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
30 வருடங்களுக்குட்பட்ட காலப்பகுதியில் எவராவது காணாமல் போயிருக்கும் பட்சத்தில் அவர் தொடர்பில் அவரது நெருங்கிய உறவினர் இறந்திருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாமென நம்பிக்கையாக கருதும் சந்தர்ப்பத்தில் அது தொடர்பான பதிவை மேற்கொள்ள முடியும்.
குறித்த பதிவை மேற்கொள்ளும்போது தம்மிடமுள்ள அனைத்து ஆவணங்களின் பிரதிகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அத்துடன் காணாமல் போயிருப்பவர் எங்குள்ளார் என்பது தெரிந்திருந்தால் அதனையும் மறுக்காமல் கூறவேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago