2021 மார்ச் 06, சனிக்கிழமை

இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட வீடு கையளிப்பு

Super User   / 2012 நவம்பர் 20 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


513ஆம் படைப்பிரிவின் ஏற்பாட்டில் அளவெட்டி மத்திப் பிரதேசத்தில் சுமார் மூன்று இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட வீடு இன்று செவ்வாய்கிழமை கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு வீட்டின் உரிமையாளரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இந்த நிகழ்வின் போது தெரிவு செய்யப்பட்ட 18 மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களும் மாற்றுதிறன் கொண்ட இருவருக்கு சக்கர நாற்காலிகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் படைப் பிரிவுகளின் தளபதி மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் பொதுமக்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .