2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

புதிய iphone மொடல்கள் அறிமுகம்

Editorial   / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் முன்னணி மின்னணு சாதனங்கள் உற்பத்தி நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் மொடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி ஐபோன் 8 மற்றும் ஐபோன் X ஆகிய ஸ்மார்ட் போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்தாண்டும் ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன் வெளியீட்டு விழா கலிபோர்னியாவில் அந்நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நவீன காலத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறை படைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன்படி நவீன தொழில்நுட்பத்துடன் வரும் 3 ஐபோன்களில் டூயல் சிம் பயன்படுத்திக் கொள்ளலாம். பட்ஜெட் ஐபோனாக கருதப்படும் ஐபோன் 10R ஒரே ஒரு பின்புற கேமராவுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மாடலில் முற்றிலும் புதிய வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய எஸ்4 சிப்செட், இ.சி.ஜி. பரிசோதனை செய்யும் வசதிகளை புதிய வாட்ச் கொண்டுள்ளது. புதிய வாட்ச் மொடலில் முற்றிலும் புதிய எட்ஜ்-டு-எட்ஜ் வளைந்த டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட 30% பெரிது என ஆப்பிள் நிறுவனம்  தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X