2021 மே 08, சனிக்கிழமை

தொகுதி வாரி முறையில் உள்ளூராட்சித் தேர்தல்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 01 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 - எம்.யூ.எம். சனூன்

தொகுதி வாரி முறையின் கீழ் உள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் என தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தன்னிடம் கூறியதாக புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.ஆர்.எம். மு{ஹசி தெரிவித்தார்.

தாம் அவரிடம் தொடர்ந்து விடுத்து வரும் கோரிக்கைகளில் ஒன்றான ஆராட்சிக்கட்டுவ பிரதேச சபையின் கீழ் வரும் உடப்பு மற்றும் ஆண்டிமுனை கிராமங்களுக்கு தொகுதி வாரி முறையின் கீழ் தலா ஓர் உறுப்பினர் வீதம் தெரிவாவதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக மனோ கணேசன் தம்மிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக இவ்விரு கிராமங்களுக்கும் ஓர் உறுப்பினர் தெரிவு செய்யப்படும் வகையில் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகள் நிர்ணயம் தொடர்பில் முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து உரிய சிபாரிசை முன்வைக்கும் முகமாக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப-குழுவில் அமைச்சர் மனோ கணேசனும் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமது கோரிக்கையை பரிசீலித்த அமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X