2021 மே 08, சனிக்கிழமை

மாணவர்கள் கௌரவிப்பு

Kogilavani   / 2015 நவம்பர் 26 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

சிலாபம் நகர சபையின் முன்னாள் தலைவரான சட்டத்தரணி ஹிலரி பிரசன்ன பெர்னாண்டோவினால் ஆரம்பிக்கப்பட்ட 'பிரசன்ன மன்ற'த்தினால் ஐந்தாவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு,   புதன்கிழமை காலை சிலாபம் சர்லி கொரயா மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரசன்ன மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி ஹிலரி பிரசன்ன பெர்னாண்டோ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சித்தியடைந்த மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.

சிலாபம் கல்வி வலயத்துக்குட்பட்ட  பாடசாலைகளின் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் உட்பட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X