2021 மே 08, சனிக்கிழமை

யானையின் துவம்சத்தால் 10 நெல் மூட்டைகள் நாசம்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 05 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

- துஷார தென்னகோன்

பொலன்னறுவை, வெலிகந்த மல்லாவி பிரதேசத்திலுள்ள கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை, தன்னுடைய வீட்டை சேதப்படுத்தியுள்ளதுடன், அங்கிருந்த பத்து மூட்டை நெல்லையும் விழுங்கியுள்ளதாக சேதமடைந்த வீட்டின் உரிமையாளர், யு.எம்.  செனவிரத்தன தெரிவித்தார்.

காட்டு யானை தனது வீட்டை சேதப்படுத்தியதைக் கண்டு, தான் அச்சம் கொண்டு காட்டுக்குள் ஓடி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு பலமுறை காட்டுயானைகள் கிராமத்துக்குள் நுழைந்து அட்டகாசம் செய்வதனால், சொத்துக்கள் மட்டுமன்றி பயிர்களுக்கு பாரிய சேதம் ஏற்படுவதாகவும், யானைகளின் அட்டகாசத்தை தடுப்பதற்கு, உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அப்பிரதேச மக்கள் கோரியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X