2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

மற்றுமொரு இலங்கை பணிப்பெண்ணின் உடலிலிருந்து 14 ஊசிகள் வெளியேற்றம்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 12 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

குவைட் நாட்டில் கடமையாற்றிய இலங்கைப் பணிப்பெண் ஒருவரது உடலில் இருந்து 14 ஊசிகள் சத்திரசிகிச்சை மூலம் வெளியேற்றப்பட்ட சம்பவமொன்று குருணாகல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்தப் பெண்ணுக்கான சத்திர சிகிச்சை குருணாகல் வைத்தியசாலையில் இடம்பெற்றதாக மேற்படி வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவுக்குப் பொறுப்பான வைத்தியர் ஏ.ஜே.சூரவீர தெரிவித்தார்.

குவைட்டில் பணியாற்றியுள்ள மேற்படி பணிப்பெண் 45 வயதுடையவர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக மேற்படி வைத்தியர் மேலும் கூறினார். (LD)

 


  Comments - 0

 • xlntgson Saturday, 13 November 2010 08:38 PM

  ஆரியவதி என்ற பெண்ணுக்கு அநியாயம் நடந்து இருக்கலாம் என்று நான் கூட மாய்ந்து மாய்ந்து எழுதினேன். ஆனால் ஒரு மருத்துவரின் கருத்துக்குப் பின் அதை மாற்றிக்கொண்டேன். ஏனெனில் இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒருவரை வசியம் செய்து உண்மையை வரவழைக்க முடியும் என்றதற்கு அந்த பெண் தன்னை யாரும் வசியம் செய்ய அனுமதிக்கப்போவதில்லை என்று மறுத்துவிட்டார், ஏன்?
  டாக்டர் கோவூர் இதில் விற்பன்னராக திகழ்ந்தார் ஆனால் அவர் நாத்திகர்
  ஒருவரை அரைத்தூக்க நிலையில் வைத்து ஆறுதலாகவும் அமைதியாகவும் கேள்விக்குப் பதில் பெரும் விஞ்ஞான கலை!

  Reply : 0       0

  xlntgson Saturday, 13 November 2010 08:47 PM

  hypnosis எனப்படும் இந்த வகை நோய் குணப்படுத்தும் முறைக்கு எதிர்ப்பு உண்டு ஏனெனில் ஆண் மருத்துவர்கள் அவ்வாறான பெண் நோயாளிகளை மயக்கி சுய நலத்தேவைகளுக்கு ஈடுபடுத்தி விடுவதாக ஆனால் கண்ணாடி அறையில் உறவினர் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் செய்யலாம்.
  இதன் மூலம் அடிமனத்தில் இருக்கும் விடயங்கள் வெளியாகும் நோயாளியோ உறவினரோ விரும்பாத விடத்து சட்டவிரோதம் நம்பகமான மருத்துவரும் அனுபவசாலிகளும் அரிதென்பர்.முக்கியமாக hysteria போன்ற இளம்பெண்களை பாதிக்கும் நோயும், செக்ஸ் மனக்குறைபாடுகள் திருப்தி இன்மை போன்றவை சுகமாகும்.

  Reply : 0       0

  xlntgson Monday, 15 November 2010 09:18 PM

  காதோடு காது வைத்தது போல் பாடி, ஒருவருக்கு ஆனந்தம் தரும் சொற்களை கூறி, அவரை தூக்கத்தில் ஆக்குவது போல் வைத்து அவரிடம் சில கேள்விகளை கேட்டால் அவர் பதில் சொல்கின்றாரா என்று பாருங்கள் .
  அவர் உங்களை நம்பாவிட்டால் அவருக்கு தூக்கமே வராது அவர் உங்களை நம்பிவிட்டால் சில உண்மைகளை கூறிவிடுவார்.
  அதை வைத்து நீங்கள் அவரை எடைபோட்டுவிடக்கூடாது. ஏனெனில் அவர் கனவில் மிதப்பது போன்ற நிலையில் முனங்கினால் உங்களுக்கு சாதகமாக நீங்கள் விளங்கிக் கொள்வீர்கள். முடியுமானவரை கருவி துணை இன்றி ஓரளவே செய்ய இயலும். sub conscious mind

  Reply : 0       0

  xlntgson Tuesday, 16 November 2010 09:09 PM

  மனிதர்கள் விழிப்பு நிலையில் பொய்யை தான் கூறுவார்கள். உண்மையை சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள். தூக்கத்தில் உளறவும் வாய்ப்பு இருக்கிறது தூக்கத்திலும் மனிதர் பொய்யையே கனவாகக் காண்கின்றனர்.
  உண்மை சொல்பவன் பைத்தியக்காரன் அல்லது பிழைக்கத்தெரியாத ஏமாளி என்று ஆகிவிட்ட நிலையில், உண்மையை வரவழைக்கும் வழி முறைகள் அனைத்தையும் விட்டு அவர்கள் ஓடுகின்றனர்.
  மனோதத்துவப்படிப்பில் பல விடயங்கள் அறிந்து கொள்ள வாய்ப்பு இருந்தாலும் அதற்கு பெரும் வரவேற்பில்லாமை வருந்தத்தக்கது.
  நேர்மையான டாக்டர்கள் குறைவோ? பணம்தான் குறி

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .