A.P.Mathan / 2010 ஒக்டோபர் 20 , பி.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.மும்தாஜ்)
இனந்தெரியாத பெண் ஒருவரின் உருக்குலைந்த சடலம் இன்று புதன்கிழமை பிற்பகல், முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபாடு எனும் பிரதேசத்தின் கடலோரத்தில் கரையொதுங்கியுள்ளது. உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய சடலத்தை இன்று பிற்பகல் 2 மணியளவில் அப்பிரதேச மீனவர்கள் கண்டதனைத் தொடர்ந்து, முந்தல் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தலை இல்லாமலும், ஒரு கால் மற்றும் ஒரு கை என்பன இல்லாமலும் உருக்குலைந்து காணப்பட்ட சடலத்தினை அவ்விடத்திற்கு உடனடியாக விஜயம் செய்த புத்தளம் மாவட்ட நீதிபதியும் நீதவானுமாகிய எஸ்.டி.எச்.எம்.சேசிரி ஹேரத் பார்வையிட்டதுடன், பிரேத பரிசோனைக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு அனுப்புமாறு முந்தல் பொலிஸாரை பணித்தார்.
உருக்குலைந்த பெண்ணில் சடலம் இதுவரை இனம்காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1 hours ago
11 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
11 Jan 2026