2020 நவம்பர் 28, சனிக்கிழமை

பக்கத்து வீட்டுக்காரரின் போத்தல் குத்துக்கு ஒருவர் பலி

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 27 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

போத்தல் ஒன்றினை உடைத்து அதனால் குத்தப்பட்ட ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்  நேற்று உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

தும்பு ஆலை ஒன்றில் தொழிலாளியாகக் கடமையாற்றும் 51 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

உயிரிழந்த நபர் தனது மனைவியுடன் வென்னப்புவ பிரதேசத்தில் உள்ள தும்பு ஆலையொன்றிற்கு அருகில் வீடொன்றில் வசித்து வந்துள்ளதுடன், அந்த தும்பு ஆலையில் பணியாற்றியும் வந்துள்ளார். அங்கு பக்கத்து வீட்டுக்காரர் ஒருவருடன் ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில் பக்கத்து வீட்டுக்காரர் போத்தல் ஒன்றினை எடுத்து உடைத்து குறித்த நபர் மீது குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த  நபர் உடனடியாக மாராவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், அவரின் நிலை ஆபத்தாக இருந்ததால் அங்கிருந்து சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். எனினும், சிகிச்சை பயனளிக்காததால் அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ள வென்னப்புவ பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .