2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

அதிகூடிய கொடிகளை விற்பனை செய்த சமுர்த்தி அதிகாரிகள் கௌரவிப்பு

Super User   / 2010 நவம்பர் 02 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ். எம்.மும்தாஜ்)

சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தையொட்டி சமுர்த்தி அதிகார சபையினால் வருடாந்தம் நடைமுறைப்படுத்தும் கொடி விற்பனை நடவடிக்கையில் இவ்வாண்டு முந்தல் பிரதேச செயலகப் பிரிவில் அதிகூடிய கொடிகளை விற்பனை செய்த சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை முந்தல் பிரதேச செயலகப் பிரிவில் இடம்பெற்றது.

முந்தல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 31 கிராம அலுவலர் பிரிவிலும் கடந்த ஆண்டு கொடி  விற்பனை மூலம் சுமார் ஐந்தரை இலட்சம் ரூபாய் சேகரிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாண்டு சுமார் பதினைந்து இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் கொடி விற்பனையின் மூலம் சேகரிக்கப்பட்டிருந்தது.

முந்தல் பிரதேச செயலாளர் எம். ஆர். எம்.மலிக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கொடி விற்பனை மூலம் அதிகூடிய நிதியாக ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபாயினைச்  சேகரிப்புச் செய்த முந்தல் பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரி சுஜீவ நில்மினி உட்பட ஒரு இலட்சத்திற்கு அதிகமாக கொடி விற்பனை நிதி சேகரிப்புச் செய்த நான்கு சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் பிரதேச செயலாளரினால் தங்க மோதிரம், நினைவுச் சின்னம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இவ்வாறு ஒவ்வொரு பிரிவிலும் கொடி விற்பனையின் மூலம் சேகரிக்கப்படும் நிதியினைக் கொண்டு அப்பிரிவல் வறிய குடும்பங்களுக்கான வீடுகள், மலசல கூடங்கள் மற்றும் கிணறுகள் என்பன அமைத்துக் கொடுக்கப்பட்டு வருவதாக சமுர்த்தி சமூக அபிவிருத்தி அதிகாரி என் எம்.நியாஸ் தெரிவித்தார்.

இவ்வாண்டு சேகரிக்கப்பட்ட நிதியின் மூலம் இதுவரை ஐந்து வீடுகள் அமைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--