Menaka Mookandi / 2011 மார்ச் 05 , மு.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)
கருவலகஸ்வௌ, சாலியவௌ பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரசார அலுவலகமொன்று இன்று அதிகாலை ஆயுததாரிகள் சிலரால் சேதமாக்கப்பட்ட நிலையில் மலர்வளையம் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடையதான சந்தேகத்தின் பேரில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று சாலியவௌ பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை ஒரு மணியளவில் குறித்த பிரதேசத்துக்கு வான் ஒன்றில் சென்றுள்ள ஆயுததாரிகள் சிலர் மேற்படி அலுவலகத்தை கடுமையாக சேதப்படுத்திவிட்டு அங்கு மலர் வளையம் ஒன்றை வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாலியவௌ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026