2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

புத்தளம் நகர சபையின் 2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலுவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்

Super User   / 2010 டிசெம்பர் 10 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்சாத் றஹ்மத்துல்லா)

புத்தளம் நகர சபையின் 2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலுவுத்திட்டம் இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

புத்தளம் நகர சபை தலைவர் எம்.என்.எம்.நஸ்மி தலைமையில் சபை மண்டபத்தில் இன்று கூடிய போது, சபை தலைவரினால் வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டது.

2011 ஆம் ஆண்டின் உத்தேவச வருமானமாக 7 கோடி 69 இலட்சத்து 54 ஆயிரத்து 799 ரூபாவாகவும், உத்தேச செலவீனமாக 7 கோடி 33 இலட்சத்து 16 ஆயிரத்து 445 ஷரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது.

புத்தளம் நகர சபை வரலாற்றில் துண்டு விழும் தொகைக்கு பதிலாக, மேலதிகமா 63 இலட்சம் ரூபாய்கள் வருமானமாக காணப்பட்டுள்ளது.

இதனை பின்வரும் திட்டங்களுக்கு செலவு செய்ய உத்தேசித்துள்ளதாக புத்தளம் நகர சபை தலைவர் எம்.என்.எம்.நஸ்மி தெரிவித்துள்ளார்.

ஞாயிறு சந்தை, நகர மண்டபம், பாதை, மின்சாரம், குடிநீர் டிரக்டர் மற்றும வாசிகசாலைகளுக்கான புத்தக கொள்வனவு என்பனவற்றுக்கு ஒதுக்கீடு செய்வதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியின் பிரதி தலைவர் சுசன்த புஸ்பகுமார மற்றும் அபூபக்கர் சதுர்தீன், சுயோட்சை குழுவின் சார்பில் போட்டியிட்ட உறுப்பினர்களில் ஒருவரான ஏ.எஸ்.எம்.றபீக் ஆகியோர் தலைவரினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்டத்திற்கு எதிராக பேசிய போதும், ஜனாதிபதிக்காகவும், புத்தளம் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பாயிஸுக்காகவும் ஆதரவு வழங்குவதாக அறிவித்தனர்.

இருப்பினும் நகர சபை உறுப்பினாகளான சுனில் விஜய சான்த, பாலித குமார, சுயேட்சை அணியின் தலைவரான எஸ்.ஆர்.எம்.எம்.முஹ்ஸி, ஜக்கிய தேசிய கட்சியின் இரு உறுப்பினாகான உதித்த ரத்னாயக்கா, ஏ.என்.சாஜஹான் ஆகியோர் வரவு செலவு திட்த்திற்கு ஆதரவாக செயற்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--