2021 ஜனவரி 16, சனிக்கிழமை

டெங்கு ஒழிப்பு சிரமதான வேலைத்திட்டம்

Kogilavani   / 2012 நவம்பர் 17 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                  (ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

'டெங்கு நோயை முற்றாக ஒழிப்போம்' திட்டத்தின் கீழ் புத்தளம் நகர சபை ஏற்பாடு செய்த டெங்கு ஒழிப்பு சிரமதான வேலைத்திட்டம் இன்று சனிக்கிழமை புத்தளத்தில் இடம்பெற்றது.

புத்தளம் நகரபிதா கே.ஏ.பாயிஸ் தலைமையில் ஆரம்பமான இந்த டெங்கு ஒழிப்பு சிரமதான பணிகள் புத்தளம், தில்லையடி ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது புத்தளம் நகரின் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்ததுடன், பொதுமக்களும் தத்தமது வீடுகள், வர்த்தக நிலையங்கள் என்பனவற்றில் டெங்கு நுளம்பு பெருகக் கூடிய இடங்களை அடையாளங்கண்டு அதனை சிரமதான அடிப்படையில் துப்புரவு செய்தனர்.

இதன்போது, பொலிஸார், இராணுவத்தினர், புத்தளம் நகர சபை ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .