2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

மல்வத்து ஓயாவில் நீராடிய இளைஞர் பலி

Super User   / 2013 ஜனவரி 03 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நேற்று புதன்கிழமை மாலை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக திரப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம், திரப்பனை - கல்குளம் இடையிலான ஞானிக்குளம் பகுதியின் பிரதான வீதியில் மல்வத்து ஓயா பாலத்தின் திருத்தவேலைகள் தற்பொழுது துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பணிகளில் ஈடுபட்ட இளைஞர்களில் நால்வர் குளிக்கச் சென்றுள்ளனர். இவர்களில் ஒருவரே நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். ஏனைய மூவரையும் பிரதேச மக்கள் காப்பாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .