2021 மே 08, சனிக்கிழமை

கிணற்றில் தவறி விழுந்து சிறுமி உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 10 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவில பிரதேசத்தைச் சேர்ந்த பியுமி நிசங்சலா  (வயது 6) என்ற சிறுமி  பாதுகாப்பற்ற கிணற்றில் தவறிவிழுந்து உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று திங்கட்கிழமை மாலை வீட்டிலிருந்து காணாமல் போன  இந்தச் சிறுமியை  தேடியபோது, சிறுமியின் வீட்டுக்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற விவசாயக் கிணற்றிலிருந்து சிறுமி மீட்கப்பட்டார்.  உடனடியாக சிறுமியை கல்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்தபோதிலும், சிறுமி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கல்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X