2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

ஆஸியிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட 30 பேருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2012 நவம்பர் 10 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                     (கே.என்.முனாஷா)
அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்ட 30 பேரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு தஞ்சம் கோரிச் சென்ற நிலையில் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் 30பேர் அடங்கிய இளைஞர் குழுவொன்றை அந்நாட்டு அரசாங்கம் இலங்கைக்கு திருப்பியனுப்பியது. இக்குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை கட்டுநாயக்காவை வந்தடைந்தனர்.

நீர்கொழும்பு, ஜா-ஹெல, சிலாபம், வென்னப்புவ உட்பட பல பிரதேசங்களை சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு நாடுதிரும்பியிருந்தனர்.

மேற்படி குழுவினரை குற்றப்புலனாய்வு பிரிவினர்  கைது செய்து நேற்று மாலை நீதிமன்றில் ஆஜர் செய்தபோது இக்குழுவினரை எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் துலானி எஸ். வீரதுங்க உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .