Super User / 2010 ஒக்டோபர் 17 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிலாபம், மாதம்பை நகரில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் நான்கு வயது சிறுமி மரணமடைந்துள்ளதாக சிலாபம் வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் தனது பெற்றோருடன் பயணித்துக் கொண்டிருந்த சமயம் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த சிறுமி, சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அங்கு மரணமடைந்துள்ளார்.
இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் பொலிஸ் அதிகாரி ஒருவர் பயணித்த வாகனத்துடன் மோதியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மோட்டார்சைக்கிளில் நான்கு பேர் பயணித்துள்ளதாகவும், இவ்விபத்தில் காயமடைந்து மேலும் இருவர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பான விசாரணையை மாதம்பை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago