Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
A.P.Mathan / 2015 ஒக்டோபர் 04 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமானா வங்கி அண்மையில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அட்டாளைச்சேனை, மருதமுனை ஆகிய பிரதேசங்களில் ஒரே நாளில் ஏ.ரீ.எம் சேவையை திறந்து வைத்து தனது ஏ.ரீ.எம் வலையமைப்பை விஸ்தரித்துள்ளது. இந்த இரண்டு ஏ.ரீ.எம் சேவைகளுடன் அமானா வங்கியின் ஏ.ரீ.எம் வலையமைப்பு 26 ஆக அதிகரித்துள்ளது. இவற்றில் நாடுபூராகவும் உள்ள 24 கிளைகளுக்கு மேலதிகமாக பொது இடங்களில் அமைக்கப்பட்ட 3 ஏ.ரீ.எம் சேவைகள் உள்ளடங்குகின்றன.
அட்டாளைச்சேனை பிரதேச சபைக் கட்டடத்தில் உள்ள புதிய கடைத்தொகுதியிலும், மருதமுனை 69A, 70 பிரதான வீதியில் உள்ள அப்துல் அசீஸ் அன்ட் சன்ஸ் சீபெட்கோ எரிபொருள் நிலையத்திலும் அமையப்பெற்றுள்ள இந்த இரண்டு ஏ.ரீ.எம் சேவைகளையும் அமானா வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி முஹம்மத் அஸ்மீர் வைபவரீதியாக திறந்து வைத்தார்.
இந்த இரண்டு புதிய ஏ.ரீ.எம் சேவைகள் பற்றி தனது கருத்தை பகிர்ந்து கொண்ட பிரதம நிறைவேற்று அதிகாரி முஹம்மத் அஸ்மீர் அவர்கள் ' இந்த இரண்டு புதிய ஏ.ரீ.எம் சேவைகள் மூலம் கிழக்கு மாகாணத்தில் உள்ள எமது வாடிக்கையாளர்கள் தமது பணத்தை இலகுவாக மீளப் பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும் அதேவேளை, மக்களுக்கு எமது சினேகபூர்வமான பிரத்தியேக வங்கியியல் எண்ணக்கருவை தெரிவிப்பதற்கு இது எமக்கு வாய்ப்பாக அமையும் ' என்று குறிப்பிட்டார்.
நான்கு வருடங்களுக்கு முன்னர் தனது வங்கி செயற்பாடுகளை ஆரம்பித்த அமானா வங்கி இலங்கையில் போட்டித்தன்மைமிக்க வங்கித் துறையில் வலுவான தடங்களை பதித்துள்ளது. 160,000 இற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள அமானா வங்கி அதன் சேவையை விருத்தி செய்வதற்காக பல முன்னெடுப்புக்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பொது இடங்களில் அமைக்கப்பட்ட ஏ.ரீ.எம் இயந்திரங்கள், விரிவுபடுத்தப்பட்ட வங்கிச் சேவை நேரம், சனிக்கிழமை வங்கிச் சேவை என்பன இவற்றில் சிலவாகும்.
இலங்கையில் வட்டிசாராத வங்கி முறையுடன் முற்றிலும் இணங்கி செயற்படும் முதலாவது உத்தரவுபெற்ற வர்த்தக வங்கியான அமானா வங்கி, கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையத்தின் திரிசவி சபையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரு வங்கியாகும். ஒரு நிலையான எதிர்கால நோக்குடன் பீ.பீ. எல்கே தேசிய நீண்டகால தரப்பட்டியலில் அமானா வங்கியை அண்மையில் ஃபிச் ரேட்டிங் நிறுவனம் சேர்த்திருந்தது. அத்தோடு, 2014ம் ஆண்டில் அமெரிக்காவின் வொஷpங்டன் நகரில் நடைபெற்ற 18ஆவது வருடாந்த உலகின் மிகச் சிறந்த வங்கிகளைத் தெரிவு செய்யும் விருது விழாவில் குலோபல் பைனான்ஸ் சஞ்சிகையினால் உலகில் முன்னேறி வரும் மிகச் சிறந்த இஸ்லாமிய வங்கியாக அமானா வங்கி அங்கீகரிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
33 minute ago
56 minute ago
2 hours ago