Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 டிசெம்பர் 13 , மு.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தொலைதொடர்பாடல்கள் ஒழுக்காற்று ஆணைக்குழு மற்றும் Huaw ei Technologies Lanka Co. (PVT) LTD ஆகியவற்றால் முன்னெடுக்கப்பட்ட சுயாதீன ஆய்வுகளின் அடிப்படையில், நாட்டில் அதி வேகமான மொபைல் 3G இணைய சேவையை வழங்குவதில் எயார்டெல் லங்கா முதலிடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைதொடர்பாடல்கள் ஒழுக்காற்று ஆணைக்குழுவின் ஆய்வானது, பிரத்தியேகமாக பதிவிறக்க வேகங்களை அளவீடு செய்வதாக அமைந்துள்ளதுடன், Huaw ei முன்னெடுத்த ஆய்வில், அதற்கும் மேலாக, கோப்பு பதிவேற்ற வேகங்கள், உலாவல் (பிரவுசிங் வேகங்கள்) மற்றும் PING தாமதங்கள் போன்ற ஏனைய பல்வேறு அளவுருக்களையும் மதிப்பீடு செய்துள்ளது. நாட்டின் பிரதான நகரங்கள் அனைத்திலும் இந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இச்சாதனை தொடர்பில் எயார்டெல் லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஜினேஷ் ஹெக்டே கருத்து வெளியிடுகையில், “எமது வாடிக்கையாளர்களின் இணைய அனுபவத்தை மேம்படுத்துவதற்காக கடந்த ஆண்டில் நாம் ஏராளமான பணிகளை முன்னெடுத்துள்ளோம். வாடிக்கையாளர்களின் வருமான மட்டம் மற்றும் அவர்கள் எத்தகைய மொபைல் சாதனத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளனர் என்ற பேதமின்றி, அனைத்து இலங்கையர்களுக்கும் கிடைக்கக்கூடிய வகையிலான தொழில்நுட்பங்களை வழங்குவதில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். smart cache technology என்ற தொழில்நுட்பமானது, வேகங்களில் 40% அதிகரிப்பை விளைவித்துள்ளதுடன், எமது வலையமைப்பில் இணைந்துகொள்ளும் அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாகவும் மாற்றியமைத்துள்ளது. 1ஆவது ஸ்தானத்திலுள்ள இணைய சேவை வழங்குனர் என்ற இனங்காணல் அங்கிகாரத்தைப் பெற்றுள்ளமை, எமது அணியின் கடின உழைப்புக்குச் சிறந்த சான்றாகவும் உண்மையில் வெகுமதியளிப்பதாகவும் அமைந்துள்ளது. இலங்கை மக்களின் வாழ்வை வளப்படுத்த வேண்டும் என்ற எமது நிறுவனத்தின்
இலக்குக்கைம, எமது இணைய வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் முயற்சிகளை நாம் முன்னெடுப்போம்” என்று குறிப்பிட்டார்.
4 hours ago
17 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
17 Sep 2025