Gavitha / 2016 ஜூலை 13 , மு.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் முதன்மையான மற்றும் விருதுப் பெற்ற ஓடுகள் (வடைநள) உற்பத்தி நிறுவனமாக திகழ்கின்ற மெக்டைல்ஸ் லங்கா தனது கூட்டாண்மை சமூகப் பொறுப்பு நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக, அண்மையில் கண்சிகிச்சை முகாம் ஒன்றை நடாத்தியதுடன், 'மெக்டைல்ஸ் நணபஹன புலமைப் பரிசில்' திட்டத்தையும் மீள தொடக்கி வைத்துள்ளது.
பண்டாரகமவில் அமைந்துள்ள மெக்டைல்ஸ் தொழிற்சாலை வளாகத்தில் இடம்பெற்றக் கண்சிகிச்சை முகாமானது, அக்கிராமத்தில் தொழிற்சாலையைச் சூழ வசிக்கின்ற 218 பேருக்கும், நிறுவனத்தில் பணிபுரியும் 38 ஊழியர்களுக்கும் கண்சிகிச்சை சார்ந்த சேவைகளை வழங்கியது. கண்சிகிச்சை முகாம் நிகழ்வின் போது, 256 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் இவர்களில்; 122 பேருக்கு மூக்குக்கண்ணாடியை பயன்படுத்துமாறு பரிந்துரைச் செய்யப்பட்டது. இந்த மூக்குக்கண்ணாடிகளை மெக்டைல்ஸ் நிறுவனம் வழங்கி வைத்தது.
அதேவேளைப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களுள் 50 தனிநபர்கள் கண்புரை (கட்ரெக்ட்) சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றமையும் இதன்போது கண்டறியப்பட்டது. அதன்படி, இந்த சத்திரசிகிச்சைக்கான மொத்த செலவையும் ஏற்றுக் கொள்வதற்கு நிறுவனம் தீர்மானித்தது. 'இவ்வாறான சேவைகளை வேண்டி நிற்கின்ற மக்கள் விடயத்தில் சமூக பொறுப்புள்ள நிறுவனமாக நாம் திகழ வேண்டும். அவர்களுள் அதிகமானவர்கள் இக்கிராமத்தைச் சேர்ந்தவர்களாகவும் எமது ஊழியர்களாகவுமே இருக்கின்றனர்' என்று மெக்டைல்ஸ் நிறுவனத்தின் பொது முகாமையாளர் தஜித பெரேரா தெரிவித்தார்.
அதேநேரம் மெக்டைல்ஸ் நிறுவனமானது தனது 'மெக்டைல்ஸ் நணபஹன புலமைப்பரிசில்' திட்டத்தையும் தொடக்கி வைத்துள்ளது. மில்லேனிய பிரதேசத்திலுள்ள சாகர வரவேற்பு மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இங்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு 33 புலமைப் பரிசில்கள் வழங்கப்பட்டது. அதேவேளை, இவ்வருடம் க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களுக்கும் மேலதிகமாக 6 புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
4 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Oct 2025