Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 15 , மு.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
உலக வர்த்தக குறியீட்டு சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறந்த வர்த்தக குறியீடுகளுக்கான விருது வழங்கும் நிகழ்வில் இலங்கையைச் சேர்ந்த பிரபல வர்த்தக நாமங்களான மஞ்சி மற்றும் றிட்ஸ்பரி ஆகியன தங்க விருதுகளை வென்றுள்ளன.
இந்த விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் இந்தியாவில் மும்பாய் நகரில் இடம்பெற்றிருந்தது. இந்த விருதுகளுக்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல உலகப்புகழ் வாய்ந்த FMCG துறையைச் சேர்ந்த பல நிறுவனங்கள் பங்குபற்றியிருந்த போதிலும் இந்த துறையில் இலங்கையைச் சேர்ந்த மஞ்சி மற்றும் றிட்ஸ்பரி ஆகிய இரு வர்த்தக குறியீட்டு நாமங்களும் தெரிவு செய்யப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.
இந்த விருதுகள் குறித்து ஊடகங்களுக்கு அறிவிக்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிபிஎல் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவின் தலைமை அதிகாரியும், குழும பணிப்பாளருமான நந்தன விக்ரமகே கருத்து வெளியிடுகையில், 'மஞ்சி மற்றும் றிட்ஸ்பரி நாமங்கள் கடந்து வந்த பாதையில் மேற்கொண்ட பல புதிய அறிமுகங்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக நாம் இந்த விருதுகளை கருதுகிறோம். உலக வர்த்தக குறியீட்டு சம்மேளத்தின் விருதுகள் கிடைத்திருப்பது, சர்வதேச ரீதியில் காணப்படும் முன்னணி குறியீட்டு நாமங்களுடன் போட்டியிட்டதன் மூலமாகும்' என்றார்.
இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில், நநதன விக்ரமகேக்கும், தனிநபர் விருதுகள் வழங்கும் பிரிவில் சிறந்த வர்த்தக முன்நிலையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஊடகவியலாளர் சந்திப்பில் சிபிஎல் (மஞ்சி) நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் பிரதி; பொது முகாமையாளர் தேஜா பீரிஸ் கருத்து தெரிவிக்கையில், இந்த விருதின் மூலம் எமக்கு கிடைத்த அனுபவமானது, எமது வாடிக்கையாளர்களுக்கு இன்னொருபடி அதிகமாக சேவையை வழங்குவதற்கு பெரும் உந்து சக்தியாக அமைந்துள்ளது. ஏனைய நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்து நாம் அறிந்து கொண்டதன் மூலம் எமது சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளை மேலும் விஸ்தரிக்கும் நடவடிக்கைகளை எம்மால் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.' என்றார்.
இந்து விருது வழங்கல் நிகழ்வின் மூலம் நாம் பெருமளவான விடயங்களை கற்றுக் கொண்டோம். நவீன முறைக்கமைக்கமைய வர்த்தக நாமங்களை கட்டியெழுப்புவது குறித்து நாம் பெருமளவான நுணுக்கங்களை அறிந்துகொண்டோம் என றிட்ஸ்பரி சொக்லட்டின் சிரேஷ்ட வர்த்தக குறியீட்டு முகாமையாளர் நிலுபுல் டி சில்வா மற்றும் கேக் மற்றும் சொக்லட் வகைகளின் உதவி பொதுமுகாமையாளர் நதீஜ கருணாதிலக ஆகியோர் இணைந்து கருத்து தெரிவித்திருந்தனர்
உலக வர்த்தக குறியீட்டு சம்மேளனம் எனப்படுவது பல நாடுகளின் முன்னணி வர்த்தக பொருட்கள் சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் நிபுணர்களை உள்ளடக்கிய பொது அமைப்பாகும். இதில் 500க்கும் அதிகமான குறியீட்டு மற்றும் சந்தைப்படுத்தல் நாமங்கள் உள்ளடங்குகின்றன. வருடாந்தம் இந்த விருது வழங்கும் நிகழ்வு இடம்பெறுவதுடன், மாற்றமடைந்து வரும் வர்த்தக நாம கட்டமைப்புக்கு அமைய கருத்தரங்குகளையும், செயலமர்வுகளையும் மேற்கொண்டு வருகிறது. 100க்கும் அதிகமான நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி உலகெங்கிலுமுள்ள பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த வர்த்தக பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
14 minute ago
27 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
27 minute ago
5 hours ago