Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Super User / 2011 ஜனவரி 19 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
டிஸ்னி ஸ்டோர்ஸ் நிறுவனம் ஒராக்கிள் நிறுவனத்தின் விற்பனை நிலைய தீர்வுகளை பயன்படுத்த முன்வந்துள்ளது. இதன் மூலம் 7 நாடுகளிலுள்ள 330 இற்கும் அதிகமான டிஸ்னி ஸ்ரோர்ஸ் விற்பனை நிலையங்களில் இந்த தீர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதிகளவான கொடுக்கல் வாங்கல்கள், வாடிக்iகாயளர்களை விரைவாக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளவதை உறுதிப்படுத்தவும் நிறுவனத்தின் தெளிவான மற்றும் துல்லியமான செயற்பாடுகளை உறுதி செய்வதற்கும் ஏற்ற வகையில் இந்த தீர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தீர்வு அறிமுகம் குறித்து டிஸ்னி ஸ்ரோர் வேர்ல்ட் வைட் நிறுவனத்தின் சிரேஷ்ட பிரதி தலைவர் ஸ்டீவ் ஃபின்னி கருத்து தெரிவிக்கையில், 'இந்த புதிய திட்டத்தின் மூலம் எமது அனைத்து விற்பனை நிலையங்களிலும் விலை நிர்ணயம் மற்றும் சலுகைகள் குறித்து ஒரே தடவையில் இலகுவாக மாற்றத்தை மேற்கொள்ள முடிந்துள்ளது. அத்துடன் கட்டணத்தை செலுத்த வாடிக்கையாளர்களை நீண்ட வரிசையில் தற்போது நிறுத்தி வைக்க வேண்டிய நிலையும் மாறியுள்ளது' என்றார்.
இந்த தீர்வு குறித்து ஒராக்கிள் விற்பனை பிரிவின் கு10ழு பதில் தலைவர் வின்ஸ் பீகொம் கருத்து தெரிவிக்கையில், 'டிஸ்னி நிறுவனத்துக்கு நாம் வழங்கியுள்ள புதிய தீர்வுகள் அந்த நிறுவனத்தின் வெற்றிப்பாதையில் பெருமளவு சாதகத் தன்மையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிறுவனத்தின் வெற்றியின் பங்காளர்களாக எம்மை தெரிவித்துக் கொள்வதில் நாம் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago