2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

பிணையங்கள், பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவர் ராஜினாமா

Super User   / 2011 டிசெம்பர் 01 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கைப் பிணையங்கள், பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து இந்திராணி சுகததாஸ ராஜிமான செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை திறைச்சேரி செயலாளரிடம் இன்று காலை தனது ராஜினாமாவை கையளித்துள்ளார்.

தான் ராஜினாமா கடிததத்தை கையளித்த போதிலும், இதுவரை தமக்கு திறைச்சேரி செயலாளரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

ஆணைக்குழுவின் ஏனைய அங்கத்தவர்களும் ராஜினாமா செய்வரா எனக் கேட்டபோது, அதை மேற்படி அங்கத்தவர்களே தீர்மானிக்க வேண்டும் என இந்திராணி சுகததாஸ பதிலளித்தார்.

இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான திலக் கருணாரட்ன இவ்வாணைக்குழுவின் அடுத்த தலைவராக நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .