2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

எடிசலாட்டின் அதிவேக இணைய விளம்பரங்களுக்கு எஃபீஸ் விருதுகளில் வெள்ளி விருது

A.P.Mathan   / 2011 டிசெம்பர் 01 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எடிசலாட் மூலம் அறிமுகம் செய்யப்பட்டிருந்த 3.75G அதிவேக இணைய இணைப்புகள் தொடர்பான அங்குரார்ப்பண விளம்பர திட்டம், எஃபீஸ் விருதுகளில் வெள்ளி விருதை வென்றுள்ளது. எஃபீஸ் விருதுகள் இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகம் (SLIM) மற்றும் 4A's களின் ஒன்றிணைவின் மூலம் உருவாக்கப்பட்ட விளம்பர நடவடிக்கைகளுக்கு விருது வழங்கும் ஒரு நிகழ்வாகும். அண்மையில் இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்வில் 'இணைய பொருட்கள் மற்றும் சேவைகள்' பிரிவில் எடிசலாட் இந்த விருதை வென்றிருந்தமை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த மே மாதம் இலங்கையில் எடிசலாட் HSPA+ 3.75G வலையமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், இலங்கையிலுள்ள ஒரே புத்தாக்கம் மிக்க இணைய சேவைகளை வழங்கும் நிறுவனமாக தெரிவாகியிருந்தது. இது சாதாரண பாரம்பரிய பைட்ஸ் மற்றும் சதங்கள் முறையிலான இணைய சேவைகளை விட முற்றிலும் மாறுபட்ட சேவை வழங்குநராக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகளுக்கு அதிகளவு முக்கியத்துவம் வழங்கும் எடிசலாட், தனது மும்மொழியில் நீண்ட கால நோக்கில் அமைந்த வலையமைப்பு தொழில்நுட்பங்களை கொண்டு சந்தையில் புதிய நுட்பங்களை அறிமுகப்படுத்தி முன்னணியில் திகழ வேண்டும் எனும் கருத்திட்டத்துக்கு அமைவாக செயற்பட்டு வருகிறது. சிறுவர்களுக்கு தகாத இணையத்தளங்களிலிருந்து அவர்களை பாதுகாத்திடும் வகையில் நெற் நானி (Net Nanny) மென்பொருள் கொண்டதாக இந்த இணைய இணைப்பை எடிசலாட் அறிமுகம் செய்திருந்தது.

இந்த விருது குறித்து எடிசலாட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி துமிந்திர ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில், 'நாம் இலங்கையில் இணைய இணைப்புகளை அறிமுகம் செய்யும் போது சுமார் 200,000 இணைப்புகள் மாத்திரமே பாவனையில் இருந்தன. எமது அதிவேக இணைய இணைப்புகளை நாம் அறிமுகம் செய்ததன் மூலம் இலங்கையின் இணைய இணைப்புகளில் அதிகரிப்பை ஏற்படுத்த முடிந்திருந்தது. இதற்கான நாம் 'வேகமான, பாதுகாப்பான, அர்த்தமுள்ள இணையம்' எனும் விளம்பர நடவடிக்கையை முன்னெடுத்திருந்தோம். இதற்காக எமக்கு விருது கிடைத்துள்ளமை பெருமையளிக்கிறது.

சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டு காலப்பகுதியில் எடிசலாட் பல விருதுகளை வென்றுள்ளது. இதன் மூலம் இலங்கையர்கள் மத்தியில் உறுதியான நம்பிக்கை வென்றுள்ளது. இது வரை எஃபீஸ் விருதுகளில் நான்கு விருதுகளை எடிசலாட் வென்றுள்ளதுடன், அதில் மூன்று விருதுகள் வெள்ளி விருதுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விருது குறித்து எடிசலாட் நிறுவனத்தின் பிற்கொடுப்பனவு மற்றும் இணைய இணைப்புகளுக்கான சிரேஷ்ட சந்தைப்படுத்தல் முகாமையாளர் காமிக டி சில்வா கருத்து தெரிவிக்கையில், 'இந்த விருதானது எடிசலாட்டின் சந்தைப்படுத்தல் துறையுடன் தொடர்புடைய அனைத்து பிரிவினருக்கும் கிடைத்த விருதாகும்' என்றார்.

படவிளக்கம்: வெற்றிபெற்ற எடிசலாட் நிறுவனத்தின் குழுவினரும், திட்டத்தை பிரபல்யப்படுத்தி சந்தைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ரெஸ்பொன்ஸ் மார்க்கடிங் மற்றும் மைண்ட்ஷெயார் நிறுவனத்தினர் ஆகியோர் விருதுடன் காணப்படுவதை படத்தில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .