2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

வரவு செலவு திட்டத்தை வரவேற்கிறேன்: இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு தலைவர்

A.P.Mathan   / 2012 நவம்பர் 09 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றில் ஜனாதிபதியும், நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ மூலம் சமர்ப்பிக்கப்பட்ட 2013ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தை தாம் வரவேற்பதாக இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு தலைவர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

”2013 வரவு செலவு திட்டத்தில் சில முக்கியமான சலுகைகள் முதலீட்டு சந்தையில் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் பிரதானமாக, 2013 டிசெம்பர் மாதத்துக்கு முன்னர் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு 20 வீதமான பங்குகளை பொதுமக்கள் மத்தியில் பேணும் கம்பனிகளுக்கு மூன்று வருடங்கள் வரையிலான காலப்பகுதிக்கு 50 வீத வரிவிலக்கு வழங்கப்படவுள்ளமை குறித்து அறிவிக்கப்பட்டமையானது பெருமளவான கம்பனிகளை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது” என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .