A.P.Mathan / 2012 டிசெம்பர் 06 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

தற்போது நெஸ்லே நிறுவனத்தின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான தலைமை விற்பனை அதிகாரியாகப் பணியாற்றிவருகின்ற மலேசியப் பிரஜையான கணேசன் அம்பலவாணர் 2013 ஜனவரி 1ஆம் திகதி முதல் நெஸ்லே லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார். 1991இல் நெஸ்லே நிறுவனத்தில் இணைந்த அம்பலவாணர் - வர்த்தகநாம முகாமைத்துவத் துறையில் பல்வேறு பதவிநிலைகளை வகித்துள்ளதுடன், தொடர்ந்து இனிப்புத் தின்பண்டங்கள் உற்பத்தித் தொழிற்துறையில் வர்த்தகத் தொழிற்பாட்டு முகாமையாளராகவும் பணியாற்றியிருந்தார். நெஸ்லே மலேசியா நிறுவனத்தின் விற்பனைத் தொழிற்பாடுகளுக்கான பணிப்பாளராக 2003ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட அவர் தனது முதலாவது சர்வதேசமட்டத்திலான நியமனமாக தற்போது வகித்துவருகின்ற பொறுப்பை 2008ஆம் ஆண்டில் ஏற்றிருந்தார்.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .