2025 ஜூலை 12, சனிக்கிழமை

ஸ்மார்ட்போன் ஊடாக 'வர்ணப் பொருத்தம்'

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 01 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


லங்கெம் பெயின்ட்ஸ் நிறுவனமானது, ஸ்மார்ட்போன் கையடக்கத் தொலைபேசிகளின் ஊடாக 'வர்ணப் பொருத்தம் பார்க்கும்' பிரயோக மென்பொருளை அண்மையில் அறிமுகப்படுத்தியதன் மூலம் இலங்கையின் வர்ணப்பூச்சு துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து இலகுவான படிமுறைச் செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் எந்தவொரு மேற்பரப்பினதும் வர்ணத்தை முற்றுமுழுதாக மாற்றியமைப்பதற்கு இப் புதுமையான மென்பொருளானது பாவனையாளருக்கு வசதியளிக்கின்றது. 
 
ஒருவர் முதலில் Android மற்றும் IOS மென்பொருள் களஞ்சியத்தில் இருந்து இதற்கான பிரயோக மென்பொருளை தரவிறக்கம் செய்த பின்னர் 'ரொபியலக் கலர் எக்ஸ்ப்லோரர்' பிரயோக மென்பொருளை திறக்க வேண்டும். அதற்குப் பிறகு தமக்கு விருப்பமான மேற்பரப்பை அவர் புகைப்படம் எடுத்துக் கொள்தல் அவசியம். பின்னர், ரொபியலக் எமல்சன் அல்லது வெதர்கோட் உற்பத்திகளில் இருந்து வர்ணங்களை தெரிவுசெய்து மெதுவாக அழுத்தி, குறித்த மேற்பரப்பிற்கு மாறுவதன் மூலம் தெரிவுசெய்யப்பட்ட வர்ணம் பூசப்பட்ட தோற்றப்பாட்டையுடைய மேற்பரப்பை திரையில் காண முடியும். 
 
லங்கெம் சிலோன் பி.எல்.சி. நிறுவனத்தின் பணிப்பாளர் றுவான் ரீ. வீரசிங்க கூறுகையில், 'இந்த தனிச் சிறப்புமிக்க கருப்பொருளிலான வடிவமைப்பை சந்தைக்கு அறிமுகப்படுத்தும் இலங்கையின் முதலாவது வர்ணப்பூச்சு (பெயின்ட்) உற்பத்தியாளராக திகழ்வதையிட்டு நாம் மிகவும் பெருமிதம் அடைகின்றோம். அனைத்து இலங்கையர்களும் தம்மைச் சூழவுள்ள மேற்பரப்புக்களை வியத்தகு அழகுடன் மாற்றியமைத்துக் கொள்வதற்கான எல்லையற்ற சாத்தியக்கூறுகளை இந்த 'வர்ணப் பொருத்தம் பார்க்கும்' பிரயோக மென்பொருளானது கொண்டு வருகின்றது. 
 
குறிப்பிட்ட மேற்பரப்பிற்கு மேலும் எவ்வாறான ரொபியலக் வர்ணங்கள் பொருத்தமாக இருக்கும் என்பது தொடர்பான யோசனையையும் பாவனையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். அதன் பிரகாரம், அவர்கள் விற்பனை நிலையத்திற்குள் நின்றுகொண்டு யோசித்துக் கொண்டிருக்காமல் விற்பனை நிலையத்திலுள்ள பொருத்தமான வர்ணத்தை உடனடியாகவே தெரிவு செய்;வதன் மூலம் நேரத்தை மீதப்படுத்திக் கொள்ள முடியும். 
 
இந்த புதுமையான பிரயோக மென்பொருள் வசதியானது, உங்கள் வீட்டில் - உங்கள் விரல் தொடும் தூரத்தில் ரொபியலக் வர்ணத் தெரிவு அட்டையை கையில் வைத்திருப்பதைப் போன்றதாகும். இன்னுமொரு வர்ணப்பூச்சு வகையை பயன்படுத்துவதற்கு ஏற்படக்கூடிய செலவை இவ்வசதி சேமிக்கின்ற அதேநேரம், வர்ணம் ஒன்றினை தெரிவு செய்வதால் ஏற்படும் அதிருப்தி எனும் மிக விலையுயர்ந்த அபாயநேர்வையும் தவிர்க்கின்றது. 
 
உட்புற வடிவமைப்பாளர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்களுக்கு இப் பிரயோக மென்பொருள் ஒரு வரப்பிரசாதமாக அமைகின்றது. ஏனென்றால், தெரிவு செய்யப்பட்ட குறித்த வர்ணமானது எவ்வாறு காட்சிதரும் என்பதை உடனடியாகவே தமது வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் காண்பிக்க முடியும். மிகவும் செலவுமிக்க வரைகலை வடிவமைப்புக்களை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .