2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்கள் நேர் பெறுமதியில் நிறைவு

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாதத்தில் முதல் தடவையாக பிரதான சுட்டிகள் நேர் பெறுமதிகளை பதிவு செய்து நிறைவடைந்திருந்தன. சிலோன் டொபாக்கோ கம்பனி, லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி மற்றும் தேசிய அபிவிருத்தி வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்களிப்பின் காரணமாக சுட்டிகள் உயர்வான பெறுமதிகளை பதிவு செய்திருந்தது. மொத்தப்புரள்வு பெறுமதியும் 800 மில்லியன் ரூபா எனும் நிலையான பெறுமதியில் நிறைவடைந்திருந்தது. இதில் கொமர்ஷல் லீசிங் மற்றும் ஃபினான்ஸ், லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி, எக்ஸ்போலங்கா ஹோல்எங்ஸ் மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மீதான மொத்த வியாபாரங்கள் பங்களிப்பை வழங்கியிருந்தன. நு-செனலிங் மற்றும் வலிபல் பவர் ஆகிய பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
 
சந்தையின் மொத்தப்புரள்வு பெறுமதியில் வங்கி நிதியியல் மற்றும் காப்புறுதி துறை அதியுயர் பங்களிப்பை வழங்கியிருந்தது. (கொமர்ஷல் லீசிங் மற்றும் ஃபினான்ஸ் லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி மற்றும் கொமர்ஷல் வங்கி வாக்குரிமையற்ற பங்குகளின் பங்களிப்புடன்;) இந்த துறை சுட்டி 0.71% உயர்வை பதிவு செய்திருந்தது. கொமர்ஷல் லீசிங் மற்றும் ஃபினான்ஸ் பங்கொன்றின் விலை 0.10 ரூபாவால் (2.56%) உயர்வடைந்து 3.80 ரூபாவாக நிறைவடைந்திருந்தது. லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி பங்கொன்று 2.50 ரூபாவால் (3.33%) அதிகரித்து 77.50 ரூபாவாக நிறைவடைந்திருந்தது. வெளிநாட்டு உரிமையாண்மை 1,478,500 பங்குகளால் அதிகரித்திருந்தது. கொமர்ஷல் வங்கி வாக்குரிமையற்ற பங்கின் விலை மாற்றமின்றி 88.00 ரூபாவாக நிறைவடைந்திருந்தது.
 
சந்தையின் மொத்தப்புரள்வு பெறுமதியில் பன்முகத் துறை அதியுயர் பங்களிப்பை வழங்கியிருந்தது. (ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பங்களிப்புடன்;) இந்த துறை சுட்டி 0.61% சரிவை பதிவு செய்திருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்கொன்றின் விலை 0.10 ரூபாவால் (0.05%) உயர்வடைந்து 210.00 ரூபாவாக நிறைவடைந்திருந்தது. எக்ஸ்போஹோல்டிங்ஸ் பங்கின் விலை 0.20 ரூபாவால் (2.70%) உயர்வடைந்து 7.60 ரூபாவாக நிறைவடைந்திருந்தது. 
 
இதேவேளை அக்சஸ் என்ஜினியரிங் இடைக்கால பங்கிலாபமாக பங்கொன்றுக்கு 0.25 ரூபாவை அறிவித்திருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .