2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

அதியுயர் வட்டி வீதங்கள் மத்திய வங்கியால் நிர்ணயம்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதி நிறுவனங்களில் வைப்புச் செய்யப்படும் பணத்துக்கான வட்டி வீதம் 7.5 முதல் 12 வீதத்தினுள் அமைந்திருக்க வேண்டும் என மத்திய வங்கி நிர்ணயித்துள்ளது. பணம் வைப்பிலிடப்படும் கால எல்லைக்கமைவாக, இந்த இடைப்பட்ட பெறுமதியில் மாற்றம் ஏற்படுத்தலாம் என மத்திய வங்கி மேலும் அறிவித்துள்ளது.

ஏப்ரல் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்வகையில் இந்த அறிவித்தலை சகல நிதிசார் நிறுவனங்களுக்கும் மத்திய வங்கி வழங்கியுள்ளது.

சேமிப்புக் கணக்குகளுக்கு வழங்கப்படக்கூடிய அதியுயர் வட்டி வீதம் வருடமொன்றுக்கு 7.58 வீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிலையான வைப்புகளுக்கு 1 வருடம் வரையிலான வைப்புகளுக்கு 11.01 வீதமும், 1 வருடத்துக்கு மேற்பட்ட ஆனாலும், 3 வருடங்களுக்கு குறைவான வைப்புகளுக்கு 12.01 வீதமும், 3 வருடங்களுக்கு மேற்பட்ட வைப்புகளுக்கு 13.51 வீதமும் வழங்கப்படவேண்டும் என மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X