2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

உடனடி அன்பளிப்புகளை வழங்கும் மைக்ரோமெக்ஸ்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 11 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு தமது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் 'சுரண்டுங்கள் வெல்லுங்கள்' ஊக்குவிப்பு திட்டமொன்றை மைக்ரோமெக்ஸ் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தினூடாக LED TVகள் உள்ளடங்கலாக பல பெறுமதி வாய்ந்த அன்பளிப்புகளை வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகளை பெறலாம்.

இந்த ஊக்குவிப்பு திட்டம் 2014 ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி முதல் மே மாதம் 31ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இந்த காலப்பகுதியினுள் கொள்வனவு செய்யப்படும் மைக்ரோமெக்ஸ் கையடக்க தொலைபேசிகளுடன் வழங்கப்படும் சுரண்டும் அட்டைகள் மூலமாக LED TVகள், ரீ-சேர்ட்கள், குடைகள், ட்ராவலிங் பாக் வகைகள், தொப்பிகள் போன்றன வழங்கப்படவுள்ளன. வெற்றியீட்டுபவர்கள் இந்த பரிசுகளை உடனடியாக அங்கீகாரம் பெற்ற விநியோகத்தர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

எந்தவொரு மைக்ரோமெக்ஸ் வாடிக்கையாளர்களையும் இந்த திட்டத்திலிருந்து ஒதுக்கி வைக்காமல், உடனடி அன்பளிப்புகளை வெல்லாத வாடிக்கையாளர்களுக்கு மாபெரும் இறுதிப் போட்டியில் ஐந்து மோட்டார் சைக்கிள்களை வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும். இந்த மாபெரும் இறுதிப் போட்டியில் பங்குபற்றுவதற்கு வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது, சுரண்டும் அட்டையில் காணப்படும் இலக்கத்தை மைக்ரோமெக்ஸ் ஹொட்லைன் இலக்கமான 0777389389 என்பதற்கு SMS மூலம் அனுப்பி வைப்பதாகும். இந்த மாபெரும் பரிசிழுப்பு 2014 ஜூன் மாதம் 15 – 30 திகதி காலப்பகுதியினுள், நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகளின் மேற்பார்வையுடன் இடம்பெறும்.

மைக்ரோமெக்ஸ் மூலம் அழகிய ஸ்மார்ட் ஃபோன்களும், சாதாரண ஃபோன்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இரட்டை சிம் அட்டைகள் முதல், 3G அன்ட்ரொயிட் ஃபோன்கள் வரை இலங்கையர்களின் தெரிவுகளுக்கு ஏற்ப அமைந்துள்ளன. மைக்ரோமெக்ஸ் ஃபோன்கள் மஜெஸ்டிக் சிற்றி மெட்ரொபொலிடன் விற்பனை நிலையங்கள் மற்றும் நாடு முழுவதிலும் காணப்படும் விநியோகத்தர்களிடமிருந்து கொள்வனவு செய்யலாம். மேலதிக விபரங்களை http://www.micromaxinfo.com/sl/ எனும் இணையத்தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--