2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த சிறுவர்களுக்கு கல்வி வாய்ப்பு

A.P.Mathan   / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கல்விச் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு பொது மக்களிடமிருந்து நிதிசேகரிக்கும் முதாலவது செயற்திட்டத்தை அறிமுகம் செய்திருந்ததன் மூலமாக, 'குறைந்த வசதிகள் படைத்த சிறுவர்களுக்கு கல்வி மற்றும் தொழில்நிலை வழிகாட்டல்களை வழங்குவதன் மூலம் எதிர்கால தலைவர்களை உருவாக்குவது' எனும் பெரன்டினாவின் பிரதான நோக்கத்துக்கு மேலும் வலுச்சேரக்க்ப்பட்டுள்ளது.
 
JAIC ஹில்டன் ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் அறிமுகத்தின் போது, இலங்கையில் அமைந்துள்ள நெதர்லாந்து தூதுவராலயத்தின் பொறுப்பதிகாரி லியென் ஹவுபென் பங்கேற்றிருந்ததுடன், டச்சு தூதுவரான லுவிஸ் டபிள்யு.எம்.பியெட், ஜயந்த தனபால, ஹனீஃவ் யூசுஃவ், பேராசிரியர் ஹிரான் டயஸ், ஹேமகா அமரசூரிய மற்றுமு; பிரியந்தி பெர்னான்டோ ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இந்த திட்டத்துக்கான அவர்களின் பூரண ஆதரவையும் தெரிவித்திருந்தனர். பெரன்டினா குழுமத்தின் தலைவர் துலான் டி சில்வா, உரையாற்றுகையில், சிறுவர்கள் பெறுமதி வாய்ந்த அன்பளிப்புகளாக அமைந்துள்ளனர். எமது தேசத்தின் எதிர்காலத்தை தீர்மானிப்பவர்களாகவும் அமைந்துள்ளனர். எமது சகல சிறுவர்களும் கல்வியை பெற்றுக் கொள்வதற்கு சமமான உரிமையைக் கொண்டுள்ளனர். இரு தசாப்த காலப்பகுதிக்கு முன்னதாக இதை அடிப்படையாகக் கொண்டு பெரன்டினா ஆரம்பிக்கப்பட்டிருந்தது' என்றார். 
 
1992 இல் இலங்கையில் பெரன்டினா ஸ்தாபிக்கப்பட்டது. பல மாவட்டங்களில் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தரங்களுடன் தொடர்புடையதாக இந்த அமைப்பின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. தற்போது பெரன்டினா பெற்றுள்ள வெற்றிகளுக்கு டி சில்வா முன்மாதிரியாக திகழ்ந்திருந்தார். பல பின்தங்கிய குடும்பங்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்திய வண்ணம், தற்போது பெரன்டினா எய்தியுள்ள வெற்றிகளுக்கு இவர் வழிகோலியிருந்தார். இது பற்றிய மேலதிக விபரங்களை (www.berendina.org and jobsberendina.com) ஆகியவற்றில் பார்வையிட முடியும்.
 
இந்த பொது மக்களிடமிருந்தான் நிதி சேகரிப்பு செயற்பாடு என்பது 'Give2SriLanka' என அழைக்கப்படுகின்றது. வறுமை ஒழிப்பு தொடர்பாக முன்னெடுக்கப்படும் பல்வேறு செயற்பாடுகளில் இந்த செயறதிட்டம் பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
பெரன்டினா மூலமாக தற்போது 1000 புலமைப்பரிசில்கள் வருடாந்தம் வசதி வாய்ப்புகள் குறைந்த மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. அத்துடன், அவர்களுக்கு தமது கற்கைகழள எவ்வித தடைகளுமின்றி தொடரக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலும் அமைந்துள்ளது. இதில் சில சிறுவர்கள் பெருந்தோட்டப்பகுதிகள், பின்தங்கிய கிராமங்கள் மற்றும் யுத்தத்தினால் பாதிப்புற்ற பகுதிகள் ஆகியவற்றில் வசிக்கின்றனர். இப்பிரதேசங்களில் எல்லைப்படுத்தப்பட்ட சமூகங்களை காணக்கூடியதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. பெரன்டினாவினால் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட புலமைப்பரிசில்கள் வழங்கும் நடவடிக்கைகளின் மூலமாக 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான பங்களிப்புகள் செலுத்தப்பட்டிருந்தன. இதற்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில் 'Give2SriLanka' அமைந்திருக்கும்.
 
இந்த புலமைப்பரிசில் திட்டத்தின் பரிபூரண அம்சம் யாதெனில், மாணவர் எனும் நிலையிலிருந்து நிபுணர் எனும் நிலையை எய்தும் வரை உதவிகளை வழங்குவதாக அமைந்துள்ளது. உயர் தரத்தை தொடர்ந்து, மாணவர்களுக்கு தொழில்சார் ஆலோசனைகள் வழிகாட்டல்கள், தொழில் ஒன்றை பெற்றுக் கொள்வதற்கான உதவிகள் போன்றனவும் வழங்கப்படும். பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு ஒன்றும் வழங்கப்படும். தமது க.பொ.த உயர்தரத்தை தொடர்ந்து, தொழில் வாய்ப்பொன்றை பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு, 300 க்கும் அதிகமான பதிவு செய்யப்பட்டுள்ள கம்பனிகளுடன் இணைக்கப்படுவார்கள். தொழிற்பயிற்சி கற்கைகளை தொடர விரும்பும் மாணவர்களுக்கு அல்லது உயர் கல்வி வாய்ப்பை தொடர விரும்பும் மாணவர்களுக்கு 50000 ரூபாய் பெறுமதி வாய்ந்த கற்கைகளை தொடர்வதற்கான புலமைப்பரிசில்கள் வழங்கப்படும். தமது ஆங்கிலம் மற்றும் ஏனைய ஆளுமைகளை விருத்தி செய்து கொள்ள எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். மாணவர்களுக்கு இவ்வாறான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் செயற்பாடுகளுக்கு இரு மாணவர்கள் சிறந்த முன்னுதாரணமாக திகழ்கின்றனர். அவர்களுக்கு சாதாரண தர கற்கைகளை தொடர்வதற்கான உதவிகளும் வழங்கப்பட்டிருந்தன. இதில் ஒரு மாணவர் தற்போது பேராதனை பல்கலைக்கழகத்தில் பல்வைத்திய பீடத்தில் உயர் கல்வியை தொடர்வதுடன், மற்றைய மாணவர் களனி பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் தமது பட்டப்படிப்பை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது. 
 
புலமைப்பரிசில் திட்டம், தற்போது 9 மாவட்டங்களில் முன்னெடுக்கப்படுவதுடன், 2020 ஆம் ஆண்டளவில் 5000 மாணவர்களுக்கு சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் காலத்தில் சகல மாவட்டங்களையும் இந்த திட்டத்தில் உள்வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. அனுகூலம் பெறுவோரின் எண்ணிக்கையை 100000 சிறுவர்கள் வரை அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த 'Give2SriLanka' செயற்திட்டத்தின் மூலமாக பொது மக்களுக்கும் தமது பங்களிப்பை மேற்கொள்ள முடியும் என பெரன்டினா அழைப்புவிடுத்துள்ளதுடன், மேலதிக விபரங்களை www.give2srilanka.com எனும் இணையத்தளத்தில் பார்வையிட முடியும் எனவும் அறிவித்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .