2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

டப்ரோபானா 4X4 போட்டிக்காக வனங்களில் இணைய வசதிகளை ஏற்படுத்தியது எடிசலாட்

A.P.Mathan   / 2011 நவம்பர் 23 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டப்ரோபானா 4X4 போட்டிக்கான பிரதான அனுசரணையை எடிசலாட் வழங்கியிருந்தது. கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி இந்த போட்டி நான்கு சக்கர வாகன செலுத்துனர்களின் சங்கம் இந்த போட்டியை ஏற்பாடு செய்திருந்தது, மொனராகலை மாவட்டத்தை சேர்ந்த கம்பானா கிராமத்தை சூழ்ந்துள்ள வனாந்தர பகுதியினூடாக இந்த போட்டிகள் இடம்பெற்றன. இந்த போட்டியின் போது வனாந்தரப்பகுதியில் இணையத்தை உபயோகிப்பதற்கான வசதியை எடிசலாட் ஏற்படுத்தியிருந்தது. இலங்கையின் முதலாவது 4X4 போட்டியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம்முறை டப்ரோபானா போட்டி சர்வதேச மழைக்காடுகள் சவால் போட்டித்தொடரின் ஓரங்கமாக இடம்பெற்றிருந்தது.

டீம் 161, லூ ஃபூ சியொங் மற்றும் எட்வர்ட் பென்கொங் மலேசியா அணியினர் முதலாமிடத்தை இந்த போட்டியில் பெற்றுக் கொண்டனர். இந்த போட்டியில் பங்குபற்றிய வெளிநாட்டு அணியினர் அனைவரும் நாட்டின் எழில் மிகுந்த தன்மை மற்றும் வனாந்திரங்களின் வனப்பை பெரிதும் பாராட்டியிருந்தனர்.

எடிசலாட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி துமிந்திர ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில், 'டப்ரோபானா 4X4 போட்டிக்கு நாம் அனுசரணை வழங்கியமை குறித்து பெரிதும் மகிழ்ச்சியடைகிறோம். எமது நவீன தொழில்நுட்பங்களின் மூலம் நாம் இலங்கையின் விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்கு பல வழிமுறைகளில் பங்களிப்பு வழங்கி வருகிறோம். இந்த போட்டியை பொறுத்த மட்டில் இந்தியா, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளில் இடம்பெற்றிருந்த போதிலும், இதுபோன்ற வசதியை இலங்கையிலேயே முதற்தடவையாக ஏற்படுத்த முடிந்திருந்தது' என்றார்.

நான்கு சக்கர வாகன சங்கத்தின் தலைவர் பிரஷான் விஜேநாயக்க கருத்து தெரிவிக்கையில், 'இந்த போட்டியை நாம் இலங்கையில் ஏற்பாடு செய்தமைக்கு பிரதான காரணம், இந்த போட்டியின் மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறையை கட்டியெழுப்பும் நோக்கிலாகும். இந்த போட்டி நிறைவடைந்த பின்னர் வனாந்தரங்களின் வனப்பு மற்றும் தொழில்நுட்ப ஆளுமை குறித்து எமக்கு கிடைத்த சாதகமான கருத்துக்களின் மூலம் இந்த போட்டி வெற்றிகரமாக அமைந்திருந்தது எனும் முடிவுக்கு எமக்கு வரமுடிந்தது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .