2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

வளர்ந்து வரும் சுற்றுலா மேற்கொள்ளக்கூடிய 5 நாடுகளில் ஒன்றாக இலங்கை தெரிவு

A.P.Mathan   / 2012 நவம்பர் 12 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகளாவிய ரீதியில் வளர்ந்து வரும் சுற்றுலா மேற்கொள்ளக்கூடிய சிறந்த 5 நாடுகளில் ஒன்றாக இலங்கையும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தரப்படுத்தல் உலக சுற்றுலா சந்தையின் துறைசார் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு சுற்றுலாவை மேற்கொள்ளக்கூடிய வகையில் வளர்ந்து வரும் இதர நாடுகளில் மெக்சிகோ, மலேசியா, இந்தோனேசியா மற்றும் ஆஜன்டீனா போன்ற நாடுகளும் உள்ளடங்குகின்றன.

இலங்கை இந்த தரப்படுத்தலில் உள்வாங்கப்படுவதற்கான காரணங்களாக யுத்தம் நிறைவடைந்த பின்னர் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள், சொத்துக்களில் முதலீடுகளை மேற்கொள்ளல் மற்றும் நாட்டின் வனப்பு போன்றன அமைந்துள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .