2025 ஜூலை 03, வியாழக்கிழமை

இலங்கையில் புதிய ஓடியோ சாதனங்களை அறிமுகம் செய்யும் Philips

A.P.Mathan   / 2014 ஜூலை 04 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


Philips வர்த்தக நாமத்தின் ஓடியோ ஒலி சாதனங்களை உள்ளடக்கியுள்ள WOOX Innovations இலங்கையில் புதிய ஓடியோ தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. 
 
இந்த புதிய ஓடியோ சாதனங்களின் அறிமுக நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றது. இதன் போது Philips Fidelio HTL9100, Blu-ray ஹோம் தியெட்டர் 5000 மற்றும் 3000 தெரிவுகள், Nitro NX ஸ்பீக்கர் தெரிவுகள் மற்றும் புதிய Philips Headphones தெரிவுகள் போன்றன உள்ளடங்கியிருந்தன. புதிய கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சாதனங்கள், களியாட்டத்தின் உச்ச கட்ட களிப்பை பாவனையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. 
 
தனது Fidelio தெரிவுகளில் Philips Fidelio Soundbars HTL9100 உள்ளடங்கியுள்ளதுடன், இது றசைநடநளள பக்கவாட்டாக ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. தொலைக்காட்சி பார்வையிடல் மற்றும் surround ஸ்பீக்கர்களில் பாடல்களை கேட்பது என்பது பிரதான அலகுடன் ஒன்றிணைந்து காணப்படுகிறது. இந்த ஸ்பீக்கர்கள் கழற்றப்படும் போது, முழுமையாக வயர்லஸ் அடிப்படையில் பற்றரிகளில் இயங்கும் Soundbar மூலம் சுயமாகவே virtual Surround ஒலியிலிருந்து 5.1 channel Surround Sound அனுபவத்தை பெற்றுக் கொள்ள முடியும். இந்த பதிவு என்பது திரைப்படம் ஒன்றை பார்வையிடும் போது அல்லது விளையாட்டுக்களில் ஈடுபடும் போது விசேட அனுபவத்தை பெற்றுக்கொடுக்கிறது. பற்றரியின் இயக்கம் தொடர்ந்து 10 மணித்தியாலங்கள் வரை செயற்படக்கூடியது. முழுமையான Soundbar தெரிவும் Bluetooth இல் இயங்கக்கூடியதுடன், வயர்லஸ் மியுசிக் ஸ்ரீமிங் வசதி உள்ளது.
 
வெவ்வேறான ஒலி ஆர்வலர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையிலும், அவர்களின் வாழ்க்கைத்தரத்துக்கு பொருத்தமான வகையிலும் இந்த Philips Headphones தெரிவுகள் அமைந்துள்ளன. 
 
Philips Fidelio headphone தெரிவுகள் என்பது முழுமையான ஒலி அனுபவத்தை புதிய தோற்றம், மற்றும் உயர்ந்த மூலப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம், கேட்டலுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த புதிய தெரிவுகள் அமைந்துள்ளன. 
 
`Citiscape’ என்பது பயணிக்கும் போது பாடல் கேட்டவாறு பயணிப்போருக்கு உகந்த உயர் தரம் வாய்ந்த நவீன வடிவமைப்பிலமைந்த headphones வகைகளாக அமைந்துள்ளன. அர்த்தமுள்ள புத்தாக்கங்களின் மூலம் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த பிரபல்யமான நவீன வடிவமைப்பிலமைந்த CitiScape headphones களின் மூலம் தெளிவான ஒலி வழங்கப்படுகிறது.
 
Philips ActionFit என்பது விளையாட்டு ஆர்வலர்களுக்கான தோற்றத்தை வழங்கக்கூடிய headphones மற்றும் headsets வகைகளாகவும் அமைந்துள்ளது. வியர்வைக்கு பொருத்தமானதாகவும், கழுவிக் கொள்ளக்கூடிய வகையிலும் அமைந்த headphones என்பது வினைத்திறன், வலு, ஊக்குவிப்பு ஆகியவை சிறந்த முறையில் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் போது கூட வழங்கும் வகையில் அமைந்துள்ளது. விளையாட்டு நடவடிக்கைகளுக்கு பொருந்தும் வகையில் குறைந்த எடை வடிவமைப்பு, இயற்கை பொருத்தம் மற்றும் கவர்ச்சியான நிறங்களில் அமைந்துள்ளது.
 
சர்வதேச ரீதியில் 5 தடவைகள் உலகப் புகழ்பெற்ற DJ Armin van Buuren இன் பங்குபற்றலுடன் இணைந்து WOOX Innovations தனது Philips வர்த்தக நாமத்திலான ஓடியோ தயாரிப்புகளை வடிவமைத்துள்ளது. A5Pro DJ Headphonesகள் உயர்ந்த தரங்கள் மற்றும் DJகள் மற்றும் தொழிற்துறை நிபுணர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளன. மாற்றிக் கொள்ளக்கூடிய குஷன்கள், லொக் செய்யும் கேபிள் வகை மற்றும் கையடக்கமான மடித்துக் கொள்ளக்கூடிய வடிவமைப்பு ஆகியன அணிபவருக்கு சௌகர்யத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.  
 
Blu-ray home theatre (5.1 Ch), 5000 தொடர் என்பது மிகத் தெளிவான ஒலி அமைப்பை வழங்கி அதிவேக சினிமா அனுபவத்தை வழங்குவதாக அமைந்துள்ளது. கண்கவர் வடிவமைப்பில் அமைந்துள்ளதுடன், நவீன 5.1 ஹோம் தியேட்டர் கட்டமைப்பில் வயர்லஸ் முன்புற ஸ்பீக்கர்கள், ஸ்மார்ட் தொலைக்காட்சி ஆகியனவற்றில் ஒன்லைன் சேவைகள், மல்டிமீடியா வசதிகள், Miracast போன்ற வசதிகள் காணப்படுகின்றன. இதன் மூலம் பாவனையாளர்கள் கைபேசி கேம்ஸ்களை பெரிய திரைகளில் விளையாடவும், Youtube உட்பட பல வீடியோக்களை கண்டுகளிக்கவும் முடியும்.
 
Phillips NX தெரிவுகளில் மிகவும் முக்கிய உள்ளம்சமாக NX9 அமைந்துள்ளது. எலும்பை கூட அசையச் செய்யும் 40800W வலு மற்றும் NX Bass boost மற்றும் நுகர்வோருக்கு பெரிய மற்றும் அதிகம் ஒலித்திறன் கொண்டதாக அமைந்துள்ளது. இலகுவில் பயன்படுத்தக்கூடிய இதனூடாக எந்தவொரு நபராலும் நட்சத்திர DJ ஆக ஒளிர முடியும். ஓரிடத்திலிருந்து மற்றுமொரு இடத்திற்கு இலகுவாக கொண்டு செல்லக்கூடிய வகையிலமைந்துள்ளதுடன், 260K LED விளக்குகள் களியாட்ட நிகழ்வுகளின் போது குறித்த பகுதிகளுக்கு சிறந்த ஒளியை வழங்குவதாக அமைந்துள்ளது. ஏனைய உள்ளம்சங்களில், Bluetooth மற்றும் CD, 2x USB, AUX போன்றன உள்ளடங்கியுள்ளன. இந்த தெரிவுகள் தனி டவர் ஸ்பீக்கர்கள் NX5 மற்றும் இட்டை ஸ்பீக்கர் NX7 மற்றும் NX9 செட்களை கொண்டுள்ளது.
 
அறிமுக நிகழ்வில் WOOX Innovations நிறுவனத்தின் Sound மற்றும் Acoustics இன் பணிப்பாளர் மெத்தியு டோர் கருத்து தெரிவிக்கையில், 'WOOX Innovations என்பது இன் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் அதிகளவு கவனம் செலுத்துகிறது. இதற்கமைவாக ஒப்பற்ற ஒலி சாதனங்கள் வடிவமைக்கப்படுகின்றன. '‘Golden Ears’ எனப்படும் அதிகளவு ஆளுமை படைத்த நபர்களின் பங்களிப்புடன் இந்த சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.  
 
Philips ஒலி பொறியியலாளர்களின் வழிகாட்டலில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த Golden Ears பயிற்சி திட்டம் என்பது (www.goldenears.philips.com) எனும் இணையத்தளத்தினூடாக பார்வையிட முடியும். இது Desktop மற்றும் கைபேசிகளுக்கு பொருந்தும். ஒலி குறித்து அதிகளவு கவனம் செலுத்துவோருக்கு சிறந்த கேள்விஞான பயிற்சி முறையாக இது அமைந்துள்ளது.  (Pix: பிரதீப் த்திரன)














You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .