2021 மார்ச் 03, புதன்கிழமை

பகிரங்க புத்தாக்கத் தீர்வுகளுக்காக நெஸ்லே - Hatch கைகோர்ப்பு

Gavitha   / 2020 டிசெம்பர் 15 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூர் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உள்ளூர் மூலப்பொருள்களைப் பயன்படுத்துகின்ற, பேண்தகமை கொண்ட உற்பத்திகளுக்கான பகிரங்க புத்தாக்கத் தீர்வுகளை வெளிக்கொண்டு வரும் முகமாக நெஸ்லே மற்றும் Hatch இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. விரைவாக சந்தைப்படுத்துவதற்காக ஊட்டச்சத்து, பேண்தகமை தொடர்பில் முன்பு ஒரு போதும் எழுந்திராத சிந்தனைகளை வெளிக்கொண்டு வரும் இலக்குடன், இரு நிறுவனங்களும் உள்நாட்டிலுள்ள தொடக்க நிறுவனங்கள், தொழில்முயற்சியாளர்கள், நெஸ்லேயின் ஊழியர்களுடன் சேர்ந்து அனைத்தையும் முற்றாக மாற்றியமைக்கும் ஆற்றல்கொண்ட புத்தாக்கத்தை வடிவமைக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கும்.

“114 ஆண்டுகளாக, ஊட்டச்சத்து, வாழ்க்கை முறை தேவைகளை பூர்த்தி செய்யும் சிறந்த உணவு மற்றும் பானங்களுடன் இலங்கை மக்களின் வாழ்வை நாம் மேம்படுத்தியுள்ளோம். வெறுமனே ஊட்டச்சத்து நிரம்பியவையாக மட்டுமன்றி, பேண்தகமையும் கொண்ட உற்பத்திகளை வழங்குவதில் கூடுதலான அளவில் உள்ளூர் மூலப்பொருள்களைப் பயன்படுத்த எமக்கு உதவும் வகையில், Hatch உடனான எங்கள் பங்குடமையினூடாக மேற்குறிப்பிட்ட நல்விளைவை நாம் மேம்படுத்த விரும்புகிறோம். வெளித்தரப்பு புத்தாக்குனர்களின் நுண்ணறிவு, அறிவாற்றல் ஆகியவற்றை உலகின் மிகப்பெரிய உணவு மற்றும் பானவகை உற்பத்தி நிறுவனமாக எங்கள் பலம் மற்றும் நிபுணத்துவத்துடன் ஒருங்கிணைப்போம். நாம் ஒன்றிணைந்து, உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் செயற்திட்டங்களை கையாளுவோம்” என்று நெஸ்லேயின் முகாமைத்துவப் பணிப்பாளரான ஃபேப்ரிஸ் கவாலின் அவர்கள் குறிப்பிட்டார்.

“தொடக்க நிறுவனங்களை அடைகாத்து வளர்ப்பதில் இலங்கையில் மிகப்பெரிய அளவில் களம் அமைத்துத் தருகின்ற ஒரு நிறுவனம் என்ற வகையில், ஒத்துழைத்து வளர்ச்சி காண்பதற்கு பாரிய நிறுவனங்களையும் தொடக்க நிறுவனங்களையும் ஒன்றாகக் கொண்டுவருவதில் பெருமிதம் கொள்கிறோம். எங்கள் இலக்கு எப்போதுமே புத்தாக்கத்தை ஆதரிப்பதும் உள்ளூர் வணிகங்கள் செயல்படும் முறையை மாற்றுவதும் ஆகும். இலங்கை நுகர்வோருக்கு நிலைபேறு கொண்ட நல்விளைவை ஏற்படுத்தும் திறன் கொண்ட செயற்திட்டங்களில் ஒத்துழைப்பதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்” என Hatch இன் இணை ஸ்தாபகரான ஜீவன் ஞானம் அவர்கள் குறிப்பிட்டார்.

 இரு நிறுவனங்களும் ஒன்றிணைந்து மக்கள் பெரும் எண்ணிக்கையில் கணினி நிகழ்ச்சி மூலமாக ஒருங்கிணைந்து உழைக்கின்ற ஒரு சவாலை (Hackathon) அறிமுகப்படுத்தியுள்ளதுடன், 2020 டிசெம்பர் 31க்கு முன்னர் ஆரோக்கியமான உற்பத்திகள், பேண்தகமை கொண்ட தீர்வுகளை மையமாகக் கொண்ட சிந்தனைகளை சமர்ப்பிக்க உள்ளூர் புத்தாக்குனர்களை அழைக்கின்றன. இறுதிச்சுற்றுக்கு 12 நுழைவுகள் தெரிவு செய்யப்பட்டு ரூபா. 100,000 பணப்பரிசுகளை வெல்லும் வாய்ப்பைக்  கொண்டுள்ளதுடன், வெற்றியாளருக்கு ரூபாய் 1 மில்லியன் பணப்பரிசு கிடைக்கப்பெறும். 074 093 0973 ஐ தொடர்புகொள்வதன் மூலம் அல்லது https://www.nestle.lk/innovation/innovation-news/open-innovation ஐ பார்வையிடுவதன் மூலம் மேலதிக விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .