2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

தொழில்நுட்ப தீர்வுகளை அறிமுகம் செய்துள்ள ஸ்மித்ஸ் டிடெக்ஷன்

A.P.Mathan   / 2015 ஓகஸ்ட் 11 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட X-Ray பொதிகள் ஸ்கானர்கள், வெடிபொருட்கள், போதைப்பொருட்கள், இரசாயனப் பொருட்கள் மற்றும் உயிரியல் இனங்காணல் கருவிகள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனமாக ஸ்மித்ஸ் டிடெக்ஷன் திகழ்கிறது. இந்நிறுவனத்தின் தீர்வுகள் வேகமான முறையில், வினைத்திறன் வாய்ந்த வகையில் மிகவும் துல்லியமாக மக்கள் மத்தியில் இனங்காணும் போதைப்பொருட்கள் மற்றும் வெடிபொருட்களை இனங்காணும் வகையில் அமைந்துள்ளன.

சர்வதேச ரீதியில், ஸ்மித் டிடெக்ஷன் பாதுகாப்பு தீர்வுகள் விமான நிலையங்கள், அரசாங்க கட்டிடங்கள், சுங்க பரிசோதனை நிலையங்கள், அணு உலைகள், சிறைச்சாலைகள் மற்றும் நீதிமன்றங்களில் பெருமளவு போதைப்பொருட்கள் மற்றும் வெடிபொருட்களை இனங்காண்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன.  

அண்மையில் வெளியாகியிருந்த அறிக்கையில் பிரகாரம், இலங்கையினுள் போதைப் பொருட்கள் கடத்தல் என்பது பெருமளவு அதிகரித்துச் செல்லும் நிலையில், அவற்றை இனங்காண்பதற்கு உயர் இனங்காணல் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டியுள்ளன.

2000ஆம் ஆண்டு நிறுவப்பட்ட, EXEL குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமான EXEL டிரேடிங் இன்டர்நஷனல் (பிரைவேற்) லிமிடெட் இலங்கையில் ஸ்மித்ஸ் டிடெக்ஷன் தீர்வுகளின் ஏக விநியோகத்தராக திகழ்கிறது. ஸ்மித்ஸ் டிடெக்ஷன் உடன் இந்நிறுவனம கொண்டுள்ள பங்காண்மை மூலமாக நிறுவனத்தினால் பரிபூரண காப்புறுதி தீர்வுகளை வழங்கும் கொள்ளளவுத்திறன் காணப்படுகிறது. நாடு முழுவதையும் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு சரியான பராமரிப்பு சேவைகள் மற்றும் தவிர்ப்புச் சேவைகள் போன்றன 24 மணி நேரமும் வழங்கப்படுகின்றன. 

Target-ID இனால், இனங்காணல் பெறுபேறுகள் சில நொடிப் பொழுதில் மாதிரியை பாதிக்காமல் அல்லது தரமிறக்காமல் வழங்கப்படுகின்றன. Target-ID நுணுக்கமான முறையில் மேற்கொள்ளப்படும் போதைப்பொருட்கள் கடத்தலை இனங்காணும் ஆற்றல் கொண்டது. 

IONSCAN 600 தீர்வு என்பது, கைக்கடக்கமான மற்றும் இலகுவான எடை கொண்ட இனங்காட்டல் சாதனமாக அமைந்துள்ளது. இதன் மூலமாக வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருட்களை இனங்கண்டு கொள்ள முடியும். IONSCAN 600 கதிரியக்கத்திறன் இல்லாததுடன், விசேட கையாள்கைகளுக்கான தேவைகள் எதுவும் அற்றது. 

SABRE 5000 என்பது புகழ்பெற்ற, மிகச்சிரிய மற்றும் குறைந்த எடை கொண்ட கைக்கடக்கமான tri-mode (வெடிபொருட்கள், போதைப்பொருட்கள், CWA/TICs) இனங்காணல் சாதனமாக அமைந்துள்ளது. 20 நொடிகள் எனும் குறுகிய நேரத்தில் 40க்கும் அதிகமான நிகழ்ச்சி நிரலுக்குட்படுத்தப்பட்ட இனங்காணல் சாதனமாக அமைந்துள்ளது. SABRE 5000 இனால் மாதிரிகள் அல்லது நுகரக்கூடிய பொருட்களை ஆராய்ந்து இனங்கண்டு கொள்ள முடியும்.

துரிதமான, தடைகளில்லாத, துல்லியமான மற்றும் தங்கியிருக்கக்கூடிய சாதகமான ஸ்மித்ஸ் டிடெக்ஷன் புரட்சிகரமான பாதுகாப்பு தொழில்நுட்பம் அமைந்துள்ளதுடன், இவை விமான நிலையங்களில் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றன. குறிப்பாக ஜேர்மனி, சுவீடன், ஒஸ்திரியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் முக்கிய பங்களிப்பை வழங்குகிறது. அத்துடன், வளர்ந்து வரும் சந்தைகளான மத்தியகிழக்கு, பிரேசில் மற்றும் போலாந்து போன்ற நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X