2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

CLICKLIFE அறிமுகத்துடன் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்

J.A. George   / 2020 டிசெம்பர் 16 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜோன் கீல்ஸ் கம்பனியின் துணை நிறுவனமான யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி, ClickLife எனும் புரட்சிகரமான புதிய காப்புறுதித் தீர்வை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 

ClickLife ஊடாக காப்புறுதித் திட்டங்கள் பாதுகாப்பான, ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் பாவனையாளர்களுக்கு நட்பான டிஜிட்டல் சூழலில் வழங்கப்படுவதுடன், ஒரு சில படிகளில் காப்புறுதியை பெற்றுக் கொள்ளும் அனுபவத்தை வழங்குவதாக அமைந்துள்ளது.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “ClickLife இன் அறிமுகத்தினூடாக, இலங்கையர்களின் கனவைப் பாதுகாப்பதற்கான எமது அர்ப்பணிப்பு எனும் பிரதான கொள்கை மீளவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் நுகர்வோர் வாழ்க்கை முறைகள் மற்றும் நடைமுறைச் சூழல் ஆகியவற்றினூடாக அனைவருக்கும் காப்புறுதியை பெற்றுக் கொள்வது எளிமையாக்கப்பட்டுள்ளதுடன், சகாயமானதாகவும் அமைந்துள்ளது. 

ஆயுள் காப்புறுதியில் நாம் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றோம், குறிப்பாக பாரம்பரிய கட்டமைப்புகள், கடதாசிப் பாவனை மற்றும் நேரடி ஈடுபாடுகள் போன்றவற்றை இல்லாமல் செய்து, காப்புறுதியைப் பெற்றுக் கொள்ளும் செயற்பாட்டை எளிமைப்படுத்தியுள்ளோம்.

ClickLife என்பது வரையறைகளற்ற பாவனையாளர் அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்கும் மற்றும் அவர்களுக்கு சேவைகளை வழங்கும் பரிபூரண டிஜிட்டல் முறையிலான தீர்வாக அமைந்துள்ளது. அனைவருக்கும் எங்கிருந்தும், எந்தநேரத்திலும் இதனைப் பயன்படுத்த முடியும்.” என்றார்.

 தற்போதைய நடைமுறைச் சூழலை கவனத்தில் கொண்டு, ClickLife இல் ஒன்லைனில் கொள்வனவில் ஈடுபடும் முதல் 1000 வாடிக்கையாளர்களுக்கு இலவச COVID-19 காப்பீடு வழங்கப்படுகின்றது. 

இந்தத் தீர்வின் எளிமைப்படுத்தல் மற்றும் சகாயத்தன்மை ஆகியவற்றுடன், ClickLife இனால் ஒப்பற்ற மற்றும் சௌகரியமான பாவனையாளர் அனுபவம் கிடைப்பதுடன், 2 மில்லியன் ரூபாய்காப்பீட்டுக்கு, நாளொன்றுக்கு 23 ரூபாய் எனும் கவர்ச்சிகரமான விலையில் காப்புறுதியைப் பெற முடியும்.

வாடிக்கையாளரின் டிஜிட்டல் பயணத்தை மேலும் மீளக்கட்டமைக்கும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸ் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சுயமாக சேவைகளை வழங்கும் App க்கு வலுவூட்டுகின்றது. 

இந்தச் செயற்பாட்டினூடாக காப்புறுதி கொள்வனவின் பின்னர் அது தொடர்பில் பிந்திய தகவல்களை அறிந்து கொள்ளும் சிக்கல்கள் நிறைந்த மற்றும் அதிகளவு நேரத்தை நுகரும் பின்தொடர்கை செயற்பாடுகள் இல்லாமல் செய்யப்படுகின்றது.

இந்த app இல் நிலுவைத் தொகை, மீதிகள் மற்றும் நஷ்டஈடு கோரல் நிலைகள் பற்றி அறிந்து கொள்ளல் போன்றன அடங்கலாக மற்றும் கடன் சமர்ப்பிப்புகள் தொடர்பில் டிஜிட்டல் கொள்கையை செயற்படுத்தும் படிமுறையைக் கொண்ட அம்சங்கள் காணப்படுகின்றன. 

இந்த App இல் வவுச்சர்கள் மற்றும் விலைக்கழிவு கூப்பன்கள் போன்றவற்றை உடனுக்குடன் பயன்படுத்தக்கூடிய வெகுமதித் திட்டத்துடன் தொடர்புடைய சுகாதார கண்காணிப்பு அம்சமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

 COVID-19 தொற்றுப் பரவலின் தாக்கம் எம்மத்தியில் தொடர்ந்தும் காணப்படக்கூடிய நிலையில், புத்தாக்கம், இணங்குதன்மை மற்றும் மீண்டெழுகை போன்றன நிறுவனத்தின் டிஜிட்டல் மாற்றியமைப்புச் செயற்பாடுகளின் பிரதான அங்கங்களாக அமைந்துள்ளன. கடதாசி பாவனை, நேரடிக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகள் போன்ற எதுவுமின்றி ஆயுள் காப்புறுதியை கொள்வனவு செய்யக்கூடிய ஆற்றல் என்பது, இலங்கையைப் பொறுத்தமட்டில் புதிய கொள்கை அம்சமாக அமைந்துள்ளது.

குறிப்பாக ஒன்லைனில் காப்புறுதியைக் கொள்வனவு செய்யும் செயன்முறை என்பது முற்றிலும் புதிய அம்சமாக அமைந்துள்ளது. ClickLife அறிமுகம் மற்றும் சுயமான சேவைகளை வழங்கும் App ஊடாக யூனியன் அஷ்யூரன்சினால் வாடிக்கையாளர்களுக்கு காப்புறுதித் தீர்வுகள் வழங்கப்படுவது அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

உலகளாவிய ரீதியில் பின்பற்றப்படும் படிமுறைகளின் பிரகாரம் இந்தச் செயற்பாடு அமைந்திருப்பதுடன், தமது காப்புறுதித் தேவைகளுக்கேற்ப தம்மை நிர்வகித்து, பிந்திய தகவல்களை பெற்றுக் கொள்ளும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.

இலங்கையில் இயங்கும் பழமையான ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநராக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாகத் திகழ்கின்றது. 

துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன், 2020 ஒக்டோபர் மாத இறுதியில் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 18 பில்லியனைத் தன்வசம் கொண்டிருந்ததுடன், ஆயுள் நிதியமாக ரூ. 40 பில்லியனைக் கொண்டிருந்தது.

2020 ஒக்டோபர் மாதத்தில் மூலதன போதுமை விகிதம் (CAR) 461% ஆகவும் காணப்பட்டது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. 

76 கிளைகளைக் கொண்டுள்ளதுடன், 3000க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு யூனியன் அஷ்யூரன்ஸ் இயங்குவதுடன், தொடர்ச்சியாக ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகளில் முதலீடுகளை மேற்கொண்டு, ஆயுள் காப்புறுதித் துறையில் எழும் மாற்றங்களுக்கேற்ப பணியாற்றிய வண்ணமுள்ளது.

யூனியன் அஷ்யூரன்ஸ் 24 மணி நேர ஹொட்லைன் இலக்கமான 1330 உடன் info@unionassurance.com எனும் மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ளவும் அல்லது CLICKLIFE.LK எனும் இணையத்தளத்தை பார்வையிடவும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .