2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

பாடசாலைக் கூட்டத்தில் திடீரென ஒலித்த ஆபாசப் பட ஒலி

Kogilavani   / 2010 செப்டெம்பர் 16 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமெரிக்காவில் ரோமன் கத்தோலிக்க பாடசாலையொன்றில், காலைக் கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென ஆபாச படத்தின் ஒலிகள் ஒலித்தமையால் மாணவன் ஒருவன் தண்டனையை எதிர்நோக்குகிறான்.

குறித்த ஆபாச பட ஒலியானது,  திடீரென பாடசாலையின் ஒலிபெருக்கி மூலம் சத்தமாக ஒலித்தது.

நியூயோர்க் வோட்டர் டவுனில் உள்ள ரோமன் கத்தோலிக்க மத்தியக் கல்லூரி ஒன்றில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது,

13 தொடக்கம் 18 வயதுடைய மாணவர்களை பாடசாலையின் புதிய பெண் அதிபர் லிசா பேர்சன்ஸ்  சந்தித்துப் பேசியபோது இச்சம்பவம் இடம்பெற்றதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பேர்சன்ஸ், அவர் என்ன சத்ததை கேட்டார் என்பதை  உறுதியாக சொல்லவில்லை. ஆனால், 'அது மட்டுமே துரதிஷ்டவசமான சம்பவம். அது அதிர்ச்சியை ஏற்படுத்தியது' எனத் தெரிவித்துள்ளார்.

அந்த ஒலியானது  ஆபாசக்காட்சிகளது  ஒலி என்பதுடன்  பாடசாலையில் பல  நிமிடங்கள் ஒலித்ததாக தொலைக்காட்சியொன்றுக்கு சிலர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்திற்குப் பொறுப்பான மாணவன் இனங்காணப்பட்டுள்ளதாகவும் ஆனால், இன்னும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பேர்சன்ஸ் தெரிவித்துள்ளார்.

'இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரினதும் பெற்றோர்கள், பாடசாலை நிர்வாகத்தால் தொடர்புகொள்ளப்பட்டனர். அவர்கள் இச்சம்பவம் குறித்து கவலையடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறார்கள் குறித்து நான் மிகக் கவலையடைகிறேன்' என அவர் மேலும் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--