2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

வகுப்பறையில் சுய இன்பத்தில் ஈடுபட்ட ஆசிரியர் கைது

Kogilavani   / 2011 நவம்பர் 21 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வகுப்பறையில் பாடவேளையின்பேது சுயஇன்பத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆசிரியர் ஓருவர்  கைது செய்யப்பட்ட சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

 

இலினோய்ஸ் மாநிலத்திலுள்ள ஸ்கம்பர்க் கிறிஸ்தவ பாடசாலையின் ஆசிரியரான போல் லாடியூக் (வயது 75) என்பவர்  இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்ட குற்றத்திற்காக பாடசாலையிலிருந்து கடந்த வாரம் நீக்கப்பட்டார்.

மேற்படி ஆசிரியர் வகுப்பறையின் மேடையில் சுய இன்பத்தில் ஈடுபட்ட நிலையில் காணப்பட்டதாக மாணவரொருவர் மற்றுமொரு ஆசிரியரிடம் முறையிட்டுள்ளார்.

வகுப்பறையில் வைத்து தவறான  நடத்தையில் ஈடுபட்ட குற்றத்திற்காகவும் சிறார் மீதான பாலியல் சுரண்டலில் ஈடுப்பட்ட பெருங்குற்றத்திற்காகவும் மேற்படி நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 40,000 அமெரிக்க டொலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டது. அவர் கடந்த புதன்கிழமை பிணையில் வெளியில் வந்தார்.

லாடியூக், பிணையில் வெளியில் வந்த பின்பு அவரது மனைவிக்காக வெளியில் காத்திருந்த தருணத்தில் செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, 'இந்த விடயம் தொடர்பாக எதுவும் கூற விரும்பவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து வழக்குத்தொடுநர்கள் தெரிவிக்கையில், அவர் தனது நடத்தையை ஒப்புக்கொண்டுள்ளதாகவும்  அவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இந்த செயற்பாட்டில் ஈடுப்பட்டு வந்திருக்கலாமெனவும்  ஸ்கம்பர்க் பொலிஸார் தெரிவித்ததாகவும் கூறினார்.

ஆனால் பிரதிவாதியின் வழக்குரைஞர் இது தொடர்பாக கூறுகையில், லாடியூக் முதுமையினாலும் சித்தசுயாதீனம் இன்மையினாலும் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறினார்.


  Comments - 0

 • PUTTALAM MANITHAN Tuesday, 22 November 2011 11:55 PM

  அப்போ அங்க லேடீஸ் இருக்கவில்லையா ?

  Reply : 0       0

  Mano Tuesday, 22 November 2011 01:22 AM

  Nalla kadmai unarvulla aasiriyar....

  Reply : 0       0

  Deen Mohamed Tuesday, 22 November 2011 02:55 AM

  பிரக்டிகல் வகுப்பு போல..

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .